உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் அதை தடுப்பதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. குறிப்பாக உலக நாடுகளை இணைக்கும் முக்கிய கூட்டமைப்பான ஐக்கிய நாடுகள் சபை இந்த விவகாரத்தை கூர்ந்து கவனித்து செயலாற்றிவருகிறது.
மக்களிடையே கரோனா தொடர்பான விழிப்புணர்வை மேற்கொள்ள விளம்பர நிறுவனங்கள் முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சர்வதேச பிராண்டிங், விளம்பர நிறுவனமான ஐ.என்.வி.என்.டி. நிறுவனம் கேப்டன் கோரிட் என்ற பெயரில் விழிப்புணர்வு விளம்பரத்தை உருவாக்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பிரபலமான காவல்துறை கதாபாத்திரமான கேப்டன் கோ - ரிட் என்ற பெயரில் உள்ள கதாபாத்திரம், சூப்பர் ஹீரோவாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரம் மக்களைக் காக்கும் பணியாளனாக களமிறங்கி, அதன் மூலம் மக்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இந்த விளம்பரம் உருவாகப்பட்டுள்ளது.
-
Introducing the myth busting Captain CO-RID by #INVNT x @Viskatoons x @abesaudio, who calls on Aussies to become everyday heroes – and villains. Which @WHO Myth Busters do you want him to tackle next?! Watch here: https://t.co/9XnjS9WQPA #UNCovid19Brief #RealHeroesStopTheSpread pic.twitter.com/UZ5yzCH484
— INVNT (@INVNT) April 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Introducing the myth busting Captain CO-RID by #INVNT x @Viskatoons x @abesaudio, who calls on Aussies to become everyday heroes – and villains. Which @WHO Myth Busters do you want him to tackle next?! Watch here: https://t.co/9XnjS9WQPA #UNCovid19Brief #RealHeroesStopTheSpread pic.twitter.com/UZ5yzCH484
— INVNT (@INVNT) April 15, 2020Introducing the myth busting Captain CO-RID by #INVNT x @Viskatoons x @abesaudio, who calls on Aussies to become everyday heroes – and villains. Which @WHO Myth Busters do you want him to tackle next?! Watch here: https://t.co/9XnjS9WQPA #UNCovid19Brief #RealHeroesStopTheSpread pic.twitter.com/UZ5yzCH484
— INVNT (@INVNT) April 15, 2020
மக்களுக்கு தேவையான நேரத்தில் இந்த காம்ரேட் களத்திற்குவருவார் என்ற கோஷத்துடம் மக்கள் முன் வந்து நிற்கும் இந்த சூப்பர் ஹீரோ, மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்கள் மத்தியில் குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் பலரின் வாழ்க்கையில் கரோனா பாதிப்பு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர்ந்த நாங்கள், சமூகத்தில் எங்களால் முடிந்த நம்பிக்கை விதைக்கும் முயற்சியில் இந்த ஆக்கம் உருவாக்கப்பட்டுள்ளது என ஐ.என்.வி.என்.டி. நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஸ்காட் குலேத்தர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மூவர்ணக் கொடி போர்த்திய ஆல்ப்ஸ் மலை!