சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த ஸ்ரீ குருநானக் தேவின் 551ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சீக்கியர்களின் புனித நாளாக கருதப்படும் குருபுராப் விழாவை முன்னிட்டு, கனடா நாடாளுமன்ற உறுப்பினர் பார்திஷ் சாக்கர் ஏற்பாடு செய்த முகநூல் நேரலை நிகழ்வில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்று பேசினார்.
அந்நிகழ்வில் பேசிய அவர், “அமைதி வழியில் எதிர்ப்பைப் பதிவு செய்யும் உரிமையைப் பாதுகாக்க கனடா எப்போதும் துணையிருக்கும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிவரும் விவசாயிகள் குறித்து இந்தியாவில் இருந்து வெளிவரும் செய்திகளை அறிந்துள்ளேன். அவற்றை நான் நினைவில் கொண்டிருக்கிறேன். அங்கு நிலவும் நிலைமை பற்றி நாங்கள் கவலைக் கொண்டுள்ளோம். அவர்களது அனைவரது குடும்பம் மற்றும் நண்பர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறோம். எங்களின் மனநிலை உங்களில் பலருக்கு நன்கு தெரியும். அமைதி வழியில் எதிர்ப்பைப் பதிவு செய்யும் உரிமையைப் பாதுகாக்க கனடா எப்போதும் துணையிருக்கும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
உரையாடலின் தேவையை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். அதனால்தான் நாங்கள் அதை அடைய வேண்டுமென எங்களது கவலைகளை இந்திய அலுவலர்களுக்கு நேரடியாக பல வழிகளில் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.
கனடா பிரதமரின் கருத்திற்கு சிவசேனா மாநிலங்களவை எம்.பி., பிரியங்கா சதுர்வேதி நன்றித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள பிரியங்கா சதுர்வேதி, “அன்புள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனிதாபிமானத்தை நாங்கள் வணங்குகிறோம். நாங்கள் எப்போதும் மற்ற நாடுகள் அளிக்கும் நேசித்தை ஏற்கிறோம். மதிக்கிறோம். இந்திய நாட்டின் உள் பிரச்னை மற்றொரு நாட்டின் அரசியலுக்கு தீனிப்பொருளாக மாறுவதை ஏற்க முடியாது. விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக மற்ற நாடுகள் தலையீடு செய்வதற்கு முன்பாக அதனை தீர்க்க பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம்” என குறிப்பிட்டிருந்தார்.
-
Dear @JustinTrudeau ,touched by your concern but India’s internal issue is not fodder for another nation’s politics.Pls respect the courtesies that we always extend to other nations.
— Priyanka Chaturvedi (@priyankac19) December 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Request PM @narendramodi ji to resolve this impasse before other countries find it okay to opine.
">Dear @JustinTrudeau ,touched by your concern but India’s internal issue is not fodder for another nation’s politics.Pls respect the courtesies that we always extend to other nations.
— Priyanka Chaturvedi (@priyankac19) December 1, 2020
Request PM @narendramodi ji to resolve this impasse before other countries find it okay to opine.Dear @JustinTrudeau ,touched by your concern but India’s internal issue is not fodder for another nation’s politics.Pls respect the courtesies that we always extend to other nations.
— Priyanka Chaturvedi (@priyankac19) December 1, 2020
Request PM @narendramodi ji to resolve this impasse before other countries find it okay to opine.
இந்நிகழ்வில் காணொலி வாயிலாக எதிர்க்கட்சி தலைவர் உள்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 7 ஆவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படுமா?