அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பாஸ்கோ ரோ என்ற நகரில் காவல் நிலையத்தை நோக்கி நேற்று இரவு (உள்ளூர் நேரம்) அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இதனிடையே, அந்த நபரைப் பிடிக்கும் நோக்கில் காவல் துறை உயர் அலுவலர் ஒருவர் காவல் நிலையத்திலிருந்து வெளியேறி துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருக்கு தலையில் குண்டடிபட்டு கீழே சரிந்தார்.

இதைக் கண்ட இன்னொரு காவலர் அவரை மீட்டு பாதுகாப்பான இடத்தில் படுக்கவைத்துவிட்டு, குற்றவாளியுடன் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டார். சிறிது நேரம் நீடித்த இந்த மோதலை அடுத்து, குற்றவாளி சம்பவ இடத்தை விட்டுத் தப்பியோடிவிட்டார்.
குண்டடிபட்ட அலுவலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் வேளையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கலிபோர்னியா காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் நடத்திய ஆய்வில் தப்பியோடிய நபர் மேசன் ஜேம்ஸ் லிரா என்பதும், அவர் மாட்ரேயா பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க : 'எங்க சேவையை நீங்க பயன்படுத்தக் கூடாது' -காவல் துறைக்கு தடைபோட்ட அமேசான்!