ETV Bharat / international

ஈரானில் மன்னர் ஆட்சிக்கு வழிவகுத்த அமெரிக்கா - ரகசிய ஆவணங்கள் செல்லும் உண்மை!

author img

By

Published : Jun 14, 2020, 3:17 PM IST

மறைந்த ஈரான் மன்னர் முகமது ரீசாவுக்கு அமெரிக்கா அளித்த தவறான தகவலாலேயே, 1953ஆம் ஆண்டு ஈரானில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி அரங்கேறியதாக அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் கூறுகின்றன.

iRAN cOUP 1953
iRAN cOUP 1953

இங்கிலாந்து நிறுவனங்களின் பிடியிலிருந்த ஈரானிய எண்ணெய் துறை, அந்நாட்டு மக்களின் பெரும் போராட்டத்துக்குப் பிறகு 1951ஆம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது. இதனை ஆதரித்துவந்த முகமது மொசாதே, 1952ஆம் ஆண்டு அந்நாட்டின் பிரதமரானார். இதனால் கடும் அதிருப்திக்கு ஆளான இங்கிலாந்து அரசு, அந்நாட்டுடனான உறவை அதிரடியாகத் துண்டித்துக்கொண்டது.

இதையடுத்து, ஈரானில் பிரதமர் முகமது மொசாதேவின் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம் தீட்டிய இங்கிலாந்து அரசு, அமெரிக்காவின் உதவியை நாடியது. ஏற்கனவே, ரஷ்யாவுடனான பனிப்போரால் அமெரிக்காவில் கம்யூனிசம் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஐசன்ஹூவர், ஈரான் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தை ஆமோதித்தார்.

அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ இத்திட்டத்துக்கு 'TPAJAX' என்று பெயர்சூட்டி, பிரிட்டன் உளவுத் துறையான எம்ஐ6 உதவியுடன் 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சிக் கவிழ்ப்பை வெற்றிகரமாக அரங்கேற்றியது. இது, ஈரான் மன்னர் முகமது ரீசா பஹ்லவி மீண்டும் அசுர பலத்துடன் அந்நாட்டில் அதிகாரத்துக்கு வருவதற்கும், இங்கிலாந்து எண்ணெய் நிறுவனங்கள் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் ஈரானில் செயல்படவும் வழிவகை செய்ததது.

இந்நிலையில், ஈரானுக்கான அமெரிக்க தூதர் லாய் ஹான்டர்சன் தன்னை அறியாமல், மன்னர் முகமதுவுக்கு அளித்த தவறான தகவலினாலேயே 1953 ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேறியதாக தற்போது கசிந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை ரகசிய ஆவணங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈரானில் பிரதமர் முகமது மொசாதேவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை உணர்ந்த மன்னர் முகமது ரீசா பீதியில், 1953ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். இதனிடையே, இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு நெருக்கமான ஒருவர் வெளிநாடு செல்வது அவருக்குக் கவலையளிப்பதாக லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம், தெஹ்ரான் அமெரிக்க தூதரகத்துக்குத் தவறான தகவலை ஒன்றை அனுப்பியுள்ளது.

இதனடிப்படையில், ஈரானில் உள்ள அமெரிக்க தூதர் லாய் ஹான்டர்சன், மன்னர் முகமதைத் தொடர்புகொண்டு ராணியின் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால், மன்னர் முகமது நாடு தப்பி செல்லும் திட்டத்தைக் கைவிட்டார். உண்மையில் ராணி எலிசபெத் ’ஆர்எம்எஸ் குயின் எலிசபெத்’ என்ற கப்பலையே குறிப்பிட்டுப் பேசியதை உணர்ந்த அமெரிக்க வெளியுறவுத் துறை, தூதர் லாய் ஹான்டர்சனுக்கு தகவல் அனுப்பியது. ஆனால், அதற்குள் அவர் மன்னரிடம் தவறான தகவலைக் கூறிவிட்டார்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள 'குயின் அண்டி தி கூ' என்ற ஆவணப் படத்தை இயக்கிய ரிச்சர்ட் அல்திரிச் பேசுகையில், "மன்னர் முகமது ரீசா ஈரானை விட்டுத் தப்பியோடியிருந்தால், 1953ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு நடந்திருக்காது. அவர் பெட்டிப் படுக்கைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு விமான நிலையத்துக்குச் செல்ல தயாராகி இருந்த சூழலில்தான் அமெரிக்க தூதர் அத்தகவலைக் கூறியுள்ளார்" என்றார்.

ஆனால், 2017ஆம் ஆண்டு அமரிக்க தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்து வெளியிடப்பட்ட ரகசிய ஆவணங்களில் இந்தத் தகவல்கள் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து அசோசியேட் ஃபிரஸ் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை பதிலளிக்கவில்லை. இன்னும் பல ரகசியங்களை அமெரிக்க அரசு மக்களிடமிருந்து மூடி மறைப்பது இந்தப் புதிய ஆவணங்கள் தெளிவாகியுள்ளதாக ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஈரான் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மெல்கம் பிரையன் என்பவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை ஈரான் இன்றளவும் எதிரி நாடாகாவே பார்க்கிறது. அதேசமயம், பிரிட்டன் அரசை 'முதுமையான நரி' (The Old Fox) என்று ஈரான் அரசியல் விமர்சகர்கள் அழைக்கின்றனர்.

இதையும் படிகள் : 'கரோனா உள்ளவர்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டலாம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.