ETV Bharat / international

காட்டுத் தீ: அமேசானுக்கு ராணுவத்தை அனுப்பியது பிரேசில்! - jair bolsonaro send troops to extinguish amaozn fire

பிரெசிலியா: அமேசான் மலைக்காடுகளில் பரவிவரும் பயங்கர காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியாக பிரேசில் அரசு தனது ராணுவத்தை அனுப்பியுள்ளது.

amazon fire
author img

By

Published : Aug 24, 2019, 12:24 PM IST

Updated : Aug 24, 2019, 12:34 PM IST

உலகின் மிகப் பெரிய மலைக்காடு 'அமேசான்'. தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுவேலா, இக்வடார், பொலிவியா, கையானா, சுரிநாம் உள்ளிட்ட நாடுகளில் அமேசான் பரவியுள்ளது. அமேசானின் பெரும்பாலான பகுதி பிரேசில் நாட்டில்தான் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்படுவது வழக்கமே.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக அமேசானில் பயங்கர காட்டுத் தீ பரவிவருகிறது. முந்தைய ஆண்டுகளைவிட மிக அதிக அளவில் பரவிவரும் இந்த காட்டுத் தீயில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமாகின. இதனைக் கட்டுப்படுத்த பிரேசில் மெத்தனம் காட்டிவருவதாக உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன், காட்டுத் தீயை அணைப்பது குறித்து பிரேசில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தென் அமெரிக்க நாடுகளுடனான வணிக ஒப்பந்தத்தைத் துண்டித்துவிடுவோம் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து, அமேசான் மலைக்காடுகளில் பரவிவரும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியாக அங்கு ராணுவத்தை அனுப்பி பிரேசில் அதிபர் ஜெயீர் பொல்சானாரூ உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, அமேசான் காட்டுத் தீ சம்பவத்துக்கு தன்னார்வ அமைப்புகளே காரணம் எனப் பிரேசில் அதிபர் பொல்சானாரூ கூறியிருந்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழங்கும் நிதியைக் குறைத்து பொல்சானாரூ கண்டுகொள்ளாததும், அதனால் அமேசானில் மேற்கொள்ளப்பட்டுவந்த காடழிப்பு முயற்சிகளுமே இந்த சம்பவத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

Intro:Body:

amazon forest fire update 

Conclusion:
Last Updated : Aug 24, 2019, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.