கியூபாவில் இருந்து 136 பயணிகளுடன் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில்லுக்கு போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த விமானம், விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து திடீரென திசைமாறி அருகில் இருந்த செயின்ட் ஜான் ஆற்றுக்குள் பாய்ந்தது.
ஆனால் விமானம் ஆற்றில் மூழ்காமல் மிதந்ததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து ஜாக்சன்வில் மேயர், விமானத்தில் பயணித்த அனைவரும் நலமுடன் இருக்கின்றனர். யாருக்கும் காயமில்லை. மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன என்று தெரிவித்தார்.
இந்நிலையில், விமானம் ஆற்றில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக (அக்டோபர்-மே), போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தொடர்ந்து கோர விபத்துகள், சிறு சிறு விபத்துகள், சர்ச்சைகள் சந்தித்து வருவது சர்வதேச விமானப் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.