கரோனா வைரஸ், பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் என பல பிரச்னைகளில் அமெரிக்கா சிக்கித்தவித்தும் வரும் நிலையில், ட்ரம்ப்புக்கு எதிரான ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் தேர்வு செய்யப்பட்டார். திறமைவாய்ந்த வேட்பாளர்களுடன் போட்டியிட்டு அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது கெளரமாக இருக்கிறது என பிடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கட்சியில் உள்ள அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து, அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதைப் பெருமையாகக் கருதுகிறேன். ஜனநாயக கட்சியின் திறமைவாய்ந்த வேட்பாளர்களுடன் போட்டியிட்டு, அதிபர் வேட்பாளராகத் தேர்வுசெய்யப்பட்டிருப்பது கெளரமாக இருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனநாயக கட்சியில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கு கடும் போட்டியைத் தந்த பெர்னி சாண்டர்ஸ் தனது பரப்புரையை ஏப்ரல் மாதம் முடிந்துகொண்டார். ஏழு மாநிலம் மற்றும் கொலம்பியா மாவட்டத்தில் முதன்மைத் தேர்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து, 1,991 பிரதிநிதிகளின் ஆதரவை பிடன் திரட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போராட்டக்காரர்களுடன் மண்டியிட்ட கனடா பிரதமர்!