ETV Bharat / international

'100 நாள்களுக்கு மட்டும் மாஸ்க் அணியுங்கள்' - பைடன் - அமெரிக்காவில் கரோனா தொற்று

வாஷிங்டன்: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தான் அதிபராக பதவியேற்ற பின் முதல் 100 நாள்களுக்கு மட்டும் பொதுமக்கள் மாஸ்க்குகளை அணிய வேண்டும் என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.

Biden
Biden
author img

By

Published : Dec 4, 2020, 4:07 PM IST

அமெரிக்காவில் ஜூன் மாதம் முதல் குறைந்திருந்த கரோனா பரவல் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்நாட்டின் தொற்று நோய் வல்லுர் அந்தோணி ஃபவுசி உள்ளிட்ட பலரும் பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க்குகளை அணிய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர்.

இருப்பினும், மாஸ்க்கிற்கு எதிரான கருத்துக்களை ட்ரம்ப் தொடர்ந்து கூறிவந்தார். ட்ரம்ப்பின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கைகள் காரணமாகவே உயிரிழப்புகள் 2.75 லட்சத்திற்கும் அதிகமானது என பலர் குற்றஞ்சாட்டினர்.

புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் ஜோ பைடன் பொது இடங்களில் மாஸ்க்குகளை அணிவதை கடமை என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், நாடு முழுவதும் மாஸ்க்குகளை அணிவதைக் கட்டாயமாக்கவுள்ளதாக பரப்புரையின்போதே தெரிவித்த அவர், அது எளிமையான பணியில்லை என்பதையும் அவர் ஒப்புகொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் சிஎன்என் தொலைக்காட்சிக்கு ஜோ பைடன் அளித்துள்ள பேட்டியில்,"நான் அதிபராக பதவியேற்கும் நாளில் இருந்து சரியாக 100 நாள்களுக்கு மட்டும் அமெரிக்க மக்கள் மாஸ்க்குகளை அணியுங்கள். வாழ்நாள் முழுவதும் அணிய வேண்டாம், வெறும் 100 நாள்கள் அணியுங்கள். அதுவே கரோனா பரவலைக் கணிசமாக குறைக்கும்" என்றார்.

கரோனா காரணமாக ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் வகையில் சுமார் 900 பில்லியன் டாலர் மதிப்பிலான ஊக்குவிப்பு திட்டத்தை கேபிட்டல் ஹில் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியிருந்தார்.

இது குறித்துப் பேசிய ஜோ பைடன், "இது ஒரு நல்ல முன்னெடுப்பு. இருப்பினும், நமக்கு இது போதாது. இது போன்ற நிறைய திட்டங்கள் தேவை" என்றார்.

மேலும், கரோனா தடுப்பு மருந்தை சரியான முறையில் விநியோகிப்பதும் மிக முக்கியமானது என்ற கூறிய அவர், கரோனா தடுப்பு மருந்து குறித்து மக்கள் நம்பிக்கை இழுந்துவிட்டதாகவும் மக்களிடையே மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் முன்னிலையில் கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளப்போவதாக ஒபாமா, புஷ், கிளிண்டன் ஆகிய முன்னாள் அதிபர்கள் அறிவித்துள்ளனர். இவர்களின் அறிவிப்பை பாராட்டிய ஜோ பைடன், தேவைப்பட்டால் தானும் மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள தயார் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முன்னுதாரணமாகும் தலைவர்கள்: மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும் முன்னாள் அதிபர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.