தான்சானியா அதிபர் ஜான் போம்பே மகுஃபுலி நேற்று (மார்ச் 17) மரணமடைந்தார். அவருக்கு வயது 61. கடந்த பிப்ரவரி 27ஆம் தேதிக்குப்பின் அவர் பொதுவெளியில் தென்படாத நிலையில், அவருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுவந்தது.
இந்தச் சந்தேகத்தை உறுதி செய்வதுபோலவே அவரது மரணத்தின் செய்தி தற்போது வந்துள்ளது. 1995ஆம் ஆண்டு தான்சானியா நாடாளுமன்றத்தின் உறுப்பினரான இவர். 2010ஆம் ஆண்டில் தான்சானியா போக்குவரத்துத் துறை அமைச்சரானார்.
இந்தக் காலகட்டத்தில் சாலை கட்டுமான துறையில் இவர் மேற்கொண்ட நடவடிக்கை அவருக்கு புல்டோசர் மகுஃபுலி என்ற பெயரைத் தந்தது. 2015ஆம் ஆண்டில் அதிபராகத் தேர்வான இவர், 2020ஆம் ஆண்டில் மீண்டும் வெற்றிபெற்றார்.
கோவிட்-19 காரணமாகத்தான் இவர் மறைந்தாரா என்ற சந்தேகம் இன்னும் வெளிவராத மர்மமாகவே நீடிக்கிறது.
இதையும் படிங்க: நைஜர் துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் உயிரிழப்பு!