அல்ஜீரியா அதிபரான அப்தெல்மட்ஜித் டெபவுன் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி சிகிச்சைக்காக ஜெர்மனி சென்றதாகத் தகவல் வெளியாகியது.
அவர் ஜெர்மன் சென்றதாகக் கூறி ஆறு மாதகாலம் ஆன நிலையில், அவரது உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இதையடுத்து அந்நாட்டு மக்கள் அழுத்தம் தரவே, அவர் விரைவில் நாடு திரும்புவார் என அதிபர் அலுவலகம் அறிக்கை ஒன்றை கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியிட்டது.
அதன்பின்னரும் எந்தத் தகவலும் வெளிவராததால் அப்தெல்மட்ஜித் உடல்நிலை குறித்து தற்போது அந்நாட்டில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர், அதிபரின் பொறுப்புகளை தற்காலிகமாக ஏற்று நிர்வாகப் பணிகளை மேற்கொண்டுவருகிறார். கோவிட்-19 பாதிப்பு காரணமாக பொருளாதார நிலை அங்கு மோசமடைந்துள்ளதால் அரசுக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலையில் இனி அசால்ட்டாக ஏறலாம்