உலக பிரசித்திப்பெற்ற எகிப்து நாட்டிலுள்ள பிரமிட் சுற்றுலாத் தலத்தை காண வெளிநாட்டினர் அதிகளவில் வந்துசெல்வர். இந்நிலையில், இங்குள்ள அருங்காட்சியத்தின் வெளியே சென்று கொண்டிருந்த பேருந்தை பயங்கரவாதிகள் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இதில், படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வியட்நாமைச் சேர்ந்த மூவரும், உள்ளூர் வழிக்காட்டியும் கொல்லப்பட்டனர் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.