யாவுண்டே: கேமரூன் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள நேமலே எனும் கிராமத்தில் இன்று (டிச.27) கொடூர பேருந்து விபத்து ஏற்பட்டது. 70 இருக்கைகள் கொண்ட பேருந்து ஒன்று போகும்பன் நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் யாவுண்டேவை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது சாலையில் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து செல்ல நினைத்து பேருந்தின் ஓட்டுநர் வாகனத்தை இயக்குகையில், எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயமடைந்தனர்.
பேருந்தில் பயணித்த பெரும்பாலானோர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முடித்துவிட்டு சொந்த ஊர்களில் புத்தாண்டை குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக சென்றுக்கொண்டிருந்தவர்கள் என அந்நாட்டு அரசு அலுவலர் அப்லாம் மோனோனோ தெரிவித்துள்ளார்.
படுகாயமடைந்தவர்கள் விபத்து நடத்த பகுதிக்கு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக தீவிரமாகும் போராட்டங்கள்