அல்ஜீரியா அதிபரான அப்தெல்மட்ஜித் டெபவுன் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி சிகிச்சைக்காக ஜெர்மனி சென்றதாகத் தகவல் வெளியாகியது.
இதையடுத்து மூன்று மாத காலம் ஆன நிலையில் அவர் உடல்நிலை, இருப்பிடம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகாததால் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஐந்து நிமிட காணொலி ஒன்றை அதிபர் அப்தெல்மட்ஜித் வெளியிட்டுள்ளார்.
அதில், உடல்நிலை பாதிக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்தாலும், அல்ஜீரியாவில் நடக்கும் நிலவரங்களை கூர்ந்து கவனித்துவருகிறேன். குணடைந்ததும் விரைவில் நாடு திரும்புவேன். மூன்று மாதத்திற்குள் நாட்டில் இருப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் பிரதமர், அதிபரின் பொறுப்புகளை தற்காலிகமாக ஏற்று நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கோவிட்-19 பாதிப்பு காரணமாக பொருளாதார நிலை அங்கு மோசமடைந்துள்ளதால் அரசுக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அந்நாட்டில் 91 ஆயிரத்து 638 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 584 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வாரா ட்ரம்ப்?