கடந்த மாதம் செப்டம்பர் 14ஆம் தேதி ஆந்திரா, பிகார், குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஏழு இந்தியர்கள் லிபியாவின் அஸ்வேரிப்பில் பகுதியில் கடத்தப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்த கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் மத்திய அரசையும், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியையும் நாடினர்.
லிபியாவில் இந்திய தூதரகம் இல்லாத காரணத்தால் துனிசியா நாட்டுக்கான இந்திய தூதரகம்தான் லிபியா வாழ் இந்தியர்களின் நலன் விவகாரங்களை கையாளுகிறது. கடத்திச் செல்லப்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக துனிசியா இந்திய தூதரகம் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்நிலையில், கடத்தப்பட்ட ஏழு இந்தியர்களும் பாதுகாப்பாக விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக துனிசியாவுக்கான இந்திய தூதர் புனீத் ராய் குண்டல் தெரிவித்துள்ளார்.