ETV Bharat / headlines

எந்த விதிமீறலும் இல்லை - பிரியங்கா காந்தியை எனக்கு தெரியும்.!

author img

By

Published : Dec 28, 2019, 10:08 PM IST

லக்னோ: பிரியங்கா காந்தியை தாம் சந்தித்ததில் எந்தவித பாதுகாப்பு விதிமீறலும் இல்லை என காங்கிரஸ் தொண்டர் குர்மீத் சிங் கூறினார்.

'There was no security breach; Priyanka Gandhi knew me'

பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் 1885ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. அந்த வகையில் காங்கிரசுக்கு இன்று 135ஆவது பிறந்த நாள்.

காங்கிரஸ் நிறுவப்பட்ட தினத்தை கொண்டாடும் விதமாகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாகவும் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் பேரணி பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் கலந்துகொண்ட பிரியங்கா காந்தியை, தொண்டர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தையும் மீறி மேடையேறி சந்தித்தார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எந்த விதிமீறலும் இல்லை, பிரியங்கா காந்தியை எனக்கு தெரியும்.!

பிரியங்கா காந்தியின் பாதுகாப்பில் குளறுபடி இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பிரியங்கா காந்தியை சந்தித்த காங்கிரஸ் தொண்டர் குர்மீத் சிங், ஈடிவி பாரத் செய்தி இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், “எனக்கு பிரியங்கா காந்தியை தெரியும், இதில் எந்தவித பாதுகாப்பு விதிமீறலும் இல்லை. மேடையில் அவரை வாழ்த்தினேன்” என்றார்.

இதையும் படிங்க: ஏழைகளுக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டம் உள்ளது - பிரியங்கா காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.