ETV Bharat / headlines

இந்தியா வாரியணைத்துக்கொண்ட தமிழ்ப் புதல்வன் அப்துல் கலாம் - tamilnadu

அன்பையும் நம்பிக்கையையும் இந்திய சமூகத்திற்கு விதைத்த அப்துல் கலாம், ஒட்டுமொத்த இந்தியாவாலும் வாரியணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ்ப் புதல்வன். அவரின் 5ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்தியா வாரியணைத்துக்கொண்ட தமிழ்ப் புதல்வன் அப்துல் கலாம்

author img

By

Published : Jul 27, 2019, 11:03 AM IST

Updated : Jul 27, 2020, 12:49 PM IST

இந்தியா அரவணைத்துக்கொண்ட தமிழ்ப் புதல்வன்

'நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது தவிர்க்க முடியாத இந்தக் கேள்வியை தமிழர்கள் நிச்சயம் எதிர்கொண்டிருப்பார்கள். நான் தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் என்று பதில் கூறும் பட்சத்தில், தமிழ்நாடா அடடே நீங்கள் சிறந்த மனிதரான அப்துல் கலாம் பிறந்த மண்ணிலிருந்து வருகின்றீர்களா என்ற பதிலை இந்தியாவின் மற்ற மாநிலத்தவரிடம் இருந்து பெரும்பாலும் எதிர்பார்க்கலாம். அப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முகமாக இந்தியாவெங்கும் தன்னை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த ஒரே நபரென அப்துல் கலாமை மட்டுமே கூற முடியும்.

இந்தியளவிலும் உலகளவிலும் தன் திறமையால் பல்வேறு துறைகளில் புகழ் வெளிச்சம் பெற்றவர்கள் பலர் உள்ளனர். கூகுளின் சுந்தர் பிச்சை, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ப.சிதம்பரம் ஆகியோரை அதற்கு உதாரணமாகக் கூறலாம். இருப்பினும் மேற்கண்டவர்களை இந்திய மக்கள் அவர்களின் துறை சார்ந்த ஆளுமைகளாகவே காண்கின்றனர்.

அன்பையும் நம்பிக்கையையும் இந்திய சமூகத்திற்கு விதைத்தவர்

ஆனால், அப்துல் கலாமையோ சாமானிய இந்தியனின் நாடித்துடிப்பாகப் பார்த்தனர். பல்வேறு மொழி, மதம், இனம், சாதி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவில், காந்திக்குப் பின் ஏக மனதாக விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டு அரவணைக்கப்பட்ட நபர் அப்துல் கலாம். சொல்லப்போனால் இந்திய மக்களால் தூயவராகப் பார்க்கப்படும் அப்துல் காலமின் நன்மதிப்பை எடைபோட்டால், அவர் அரசியல் தலைவராக இருந்திருந்தால் அனைத்து இந்திய மக்களின் ஆதரவையும் தனது கள்ளமற்ற புன்னகையால் அள்ளிவிடுவார் என்றே சொல்லலாம்.

ரஷ்ய அதிபர் புதின், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் அப்துல் கலாம்

ஏன் இந்தியர்களுக்கு அப்துல் கலாமைப் பிடித்திருக்கிறது?

இந்தியாவின் கடைக்கோடி பகுதியான ராமேஸ்வரத்தில் எளிமையான சிறுபான்மை குடும்பத்தில் பிறந்து அப்துல் கலாம் இந்தியாவின் முதல் குடிமகனாக உச்சம் தொட்டவர். மேற்கண்ட வரிகளில்தான் அப்துல் கலாமுடைய வாழ்க்கையின் செய்தி அடங்கியுள்ளது. வாழ்வின் உயர்வுக்கு ராமேஸ்வரம் என்ற பூகோளமோ, எளிமையான குடும்பப் பொருளாதாரமோ, சிறுபான்மை என்று கூறப்படும் சமூகமோ தடையில்லை.

குடியரசு தலைவராக அப்துல் கலாம்
குடியரசுத் தலைவராக அப்துல் கலாம்

தனிமனித நம்பிக்கையாலும் உழைப்பாலும் மேற்கண்ட தடைகளைத்தாண்டி வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கைக்குரிய சித்திரத்தை இந்திய மக்களின் முன் வைக்கிறார் அப்துல் கலாம். பெரும்பான்மை இந்திய மக்களும் அப்துல் கலாமைப் போன்ற சாமானியர்களாகவே தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகின்றனர். இந்தியா போன்ற பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கிய சமூகத்தின் முன்னேற்றத்திற்குத் தேவையானது நம்பிக்கையே. அந்த நம்பிக்கையைத் தரும் ஒளிக்கீற்றாக இந்தியர்கள் மனதில் அப்துல் கலாம் பதிந்துள்ளார். இதுவே இந்தியர்கள் அப்துல் கலாமை விரும்ப முக்கிய காரணம்.

வீணை வாசிக்கும் அப்துல் கலாம்
வீணை வாசிக்கும் அப்துல் கலாம்

அப்துல் கலாம் தன் வாழ்நாளில் பெரிதும் உரையாடியது குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும்தான். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்குச் சென்ற அப்துல் கலாம், எதிர்கால இந்தியாவை உருவாக்கும் இளைஞர் சமூகத்திடம் இறுதி மூச்சுவரை தனது உரையாடலை நடத்தினார். 'நாம் எப்படி வாழ்ந்தாலும் நமது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்க வேண்டும்' என்ற எண்ணத்தையே அனைத்து இந்தியக் குடும்பங்களும் பல காலமாக கொண்டுள்ளன. தனக்கென ஒரு இல்வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாத கலாம், ஒட்டுமொத்த இந்தியக் குழந்தைகளையும் தன் வீட்டுப்பிள்ளையாகக் கருதி அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தவே தனது வாழ்நாளின் இறுதிப்பகுதியைச் செலவிட்டார். இதன் காரணமாகவே பல வேற்றுமைகளை கொண்ட இந்திய நாட்டில், காந்திக்கு அடுத்தபடியாக மக்களால் விரும்பப்பட்ட நபராக அப்துல் கலாம் திகழ்கிறார்.

கள்ளமற்ற புன்னகைக்கு சொந்தக்காரர்
கள்ளமற்ற புன்னகைக்கு சொந்தக்காரர்

அன்பும் நம்பிக்கையும் விதைக்கப்படட்டும்

2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி அப்துல் கலாமின் இறப்பை ஒட்டு மொத்த இந்தியாவும் தங்கள் குடும்பத்தின் இழப்பாகக் கருதியது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குடியரசுத் தலைவர், பிரதமர் தொடங்கி அனைத்து மாநில முதலமைச்சர்களும் ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள பேய்கரும்புக்கு திரண்டனர். வெறுப்பரசியல் பெரிதும் விவாதிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில், வெறுப்பின் தடத்தை சந்திக்காத ஆளுமையான அப்துல் காலமின் 5ஆம் நினைவு தினம் இன்று. கலாமைப்போலவே மனித சமூகம் அன்பையும், நம்பிக்கையையும் உலகிற்கு கொடையாக வழங்கட்டும்.

Last Updated : Jul 27, 2020, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.