சென்னை: மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் K.கந்தசாமி மற்றும் K.கணேசன் இணைந்து தயாரித்த படம் 'வட்டார வழக்கு'. இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் 'டூ லெட்' சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
-
Sakthi Film Factory is glad & Excited to let you know that we now own the WORLDWIDE rights for #VattaraValakku 🌍🎉
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Maestro @ilaiyaraaja Musical🎵
A @sakthivelan_b's @SakthiFilmFctry signature release🎬
December 29 theatrical Release.
@maduralkies @DirRamachandran @raveena116… pic.twitter.com/ngQ1SlzgV9
">Sakthi Film Factory is glad & Excited to let you know that we now own the WORLDWIDE rights for #VattaraValakku 🌍🎉
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) December 14, 2023
Maestro @ilaiyaraaja Musical🎵
A @sakthivelan_b's @SakthiFilmFctry signature release🎬
December 29 theatrical Release.
@maduralkies @DirRamachandran @raveena116… pic.twitter.com/ngQ1SlzgV9Sakthi Film Factory is glad & Excited to let you know that we now own the WORLDWIDE rights for #VattaraValakku 🌍🎉
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) December 14, 2023
Maestro @ilaiyaraaja Musical🎵
A @sakthivelan_b's @SakthiFilmFctry signature release🎬
December 29 theatrical Release.
@maduralkies @DirRamachandran @raveena116… pic.twitter.com/ngQ1SlzgV9
இப்படம் குறித்து இயக்குநரும், தயாரிப்பாளருமான கண்ணுச்சாமி ராமச்சந்திரன் கூறுகையில், “இது 1985ஆம் ஆண்டு நடப்பது போன்ற கதையைக் கொண்ட படம். உறவினர்களுக்குள் நடைபெறும் பிரச்சினையை வைத்து உருவாகி உள்ளது. குறிப்பிட்ட வட்டாரத்தில் நடக்கும் வழக்கை இப்படம் பேசுவதால் படத்திற்கு 'வட்டார வழக்கு' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மதுரைக்கு மேற்கு பகுதியில் இருக்கும் கிராமத்துப் பின்னணியில் படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். அவரது இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.
40 வருடங்களுக்கு முன் கிராம்களில் இருந்த கலப்படமில்லாத காதல், பகை மற்றும் அசலான மனிதர்கள் பற்றிய கதையை இதில் சொல்லி இருக்கிறேன். இப்படத்தில் வரும் ஃபிளாஷ்பேக் 1960-களில் நடப்பது ஆகும். இந்த படம் டிசம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது. மேலும், சக்தி ஃபிலிம்பேக்ட்ரி ரீலிஸ் செய்கிறது" எனத் தெரிவித்தார்.
பொதுவாகப் பிராந்தியத்தைச் சார்ந்த படங்களும், வட்டாரத்தைச் சார்ந்த படங்களும், அதன் வட்டார மொழிகளும் வெகு ஜனங்களை எளிதில் சென்றடையும். அதன் மூலம் அந்த படங்கள் பெரும் வெற்றி பெறும் என்பது திரை உலகத்தினுடைய நம்பிக்கை. இதன் சான்றாகப் பல திரைப்படங்கள் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விரைவில் வெளியாகும் கேப்டன் மில்லர் டிரெய்லர்.. தனுஷ் வைத்த ட்விஸ்ட்!