தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது வள்ளிமயில், தமிழரசன், பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனி நடித்து இயக்கும் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு மலேசியாவின் உள்ள லங்காவி தீவில் படமாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பில் 120 கிமீ., வேகத்தில் பைக் போட் ஓட்டிய விஜய் ஆண்டனி முன்னால் இருந்த படகு மீது மோதி தண்ணீரில் விழுந்துள்ளார்.
விஜய் ஆண்டனி நீச்சல் தெரியாமல் அதிக தண்ணீர் குடித்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். அவரை மீட்ட படக்குழுவினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது முகம் முற்றிலும் சேதமடைந்து, பற்கள் உடைந்து சுய நினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து அவரது மனைவி உடனடியாக மலேசியா சென்றுள்ளார். விஜய் ஆண்டனியை சென்னை அழைத்து வந்து சிகிச்சை மேற்கொள்ள அவரது மனைவி முடிவெடுத்துள்ளதாகவும் இன்று விஜய் ஆண்டனி சென்னை அழைத்து வரப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியே இயக்குகிறார் என்பதால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: உலகம் முழுவதும் 7 நாளில் 210 கோடி வசூல் படைத்த வாரிசு