ஹைதராபாத்: நடிகர் அர்ஜுன் நடித்த ஜெய்ஹிந்த் திரைப்படமும், சுதந்திரத்தைக் காத்த அனைவருக்கும் சொல்லுகிறோம் எங்கள் முதல் வணக்கம் என்ற தாயின் மணிக்கொடி பாடலும் இன்றளவும் கேட்டால் மக்களைப் புல்லரிக்கச் செய்யும் உணர்வை ஏற்படுத்தும்.
அனைவருக்குள்ளும் இருக்கும் தேசப்பற்று, இதுபோன்ற படங்கள் மற்றும் பாடல்களைக் கேட்கும்போது பொங்கி எழும். பொதுவாக திரைப்படங்கள் வரலாற்று நிகழ்வுகளை ஆதாரப்படுத்தும் கருவியாக மாறி உள்ள நிலையில், அதைப் பார்த்து அடுத்த தலைமுறை நடந்த நிகழ்வுகளைத் தெரிந்து கொள்கிறது.
அந்த வகையில் தான் தற்போது தேச பக்தியை பறைசாற்றும் வகையிலும், சுதந்திர வரலாற்றை புதுப்பிக்கும் நோக்கத்திலும் 5 பாலிவுட் படங்கள் உருவாகியுள்ளன. திரைக்கு வர காத்திருக்கும் அந்த படங்கள் குறித்துப் பார்க்கலாம்.!
1.சாம் பகதூர்
![patriotic film](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-08-2023/19272691_6.jpg)
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்திய ராணுவத்தின் தளபதியாக இருந்து வெற்றிக் கொடி நாட்டக் காரணமாக இருந்தவர். வங்கதேசம் என்ற தனிநாடு உருவாக காரணமாக இருந்தவர் சாம் பகதூர் எனக் கூறப்படுகிறது. மேலும், பீல்ட் மார்ஷல் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்திய இராணுவத் தளபதியான சாம் பகதூர் குறித்த வரலாற்றுப் படம் இது. இந்த படத்தில் விக்கி கவுஷல், ஃபாத்திமா சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் பகதூராக விக்கி கவுஷல் தனது கதாபாத்திரத்தை திறம்படத் தாங்கி இருக்கிறாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி திரைக்குவரவுள்ளது.
2.பிப்பா
![patriotic film](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-08-2023/19272691_5.jpg)
1971ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போர் வரலாறு குறித்த படம். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் 48 மணி நேரம் ராணுவ வீரர்கள் எதிர்கொண்ட போர்க் களத்தைத் தத்ரூபமாகப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜா மேனன். இன்ஷான் கட்டர் மற்றும் மிருணால் தாக்கூர் உள்ளிட்ட பல நடித்துள்ள இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தைக் கதைக்களமாகக் கொண்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமபல்ராம் சிங் மேத்தாவின் போர் நினைவுக் குறிப்பான தி பர்னிங் சாஃபிஸ் நாடக கதையால் ஈர்க்கப்பட்ட இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.
3.மெயின் அடல் ஹூன்
![patriotic film](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-08-2023/19272691_4.jpg)
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமாக உருவாகி இருக்கிறது "மெயின் அடல் ஹூன்". ரவி ஜாதவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அடல் பிஹாரியின் கதாபாத்திரத்தை நடிகர் பங்கஜ் திரிபாதி ஏற்று நடித்துள்ளார். வினோத் பானுசாலி மற்றும் சந்தீப் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4. ஏ வதன் மேரே வதன்
![patriotic film](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-08-2023/19272691_3.jpg)
1942 ஆம் ஆண்டு காலனித்துவ இந்தியாவையும், சுதந்திரப் போராட்ட வீர பெண்மணியை மையமாகக் கொண்டும் உருவாகி இருக்கிறது. கல்லூரி பெண்ணாக நடிக்கும் சாரா அலிகான் சுதந்திரப் போராட்ட வீரராகப் பயணிக்கும் கதைக்களம்தான் "ஏ வதன் மேரே வதன்". உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தைக் கண்ணன் ஐயர் இயக்கியுள்ளார். இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்.
5.தேஜஸ்
![patriotic film](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-08-2023/19272691_2.jpg)
தேஜஸ் திரைப்படம் முற்றிலும் ஒரு போர் விமானப் படை பெண் வீரரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. நாட்டிற்காக வீரர்கள் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள், நாட்டிற்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள் என்பதைத் தத்ரூபமாகக் காட்சிப் படுத்தவுள்ளது இந்த படம். சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கான ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகவுள்ளது.
6. எமர்ஜென்சி
![patriotic film](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-08-2023/19272691_1.jpg)
இந்தியாவின் அவசரநிலை பிரகடனத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது எமர்ஜென்சி திரைப்படம். கங்கனா ரனாவத் இயக்கி தயாரித்திருக்கும் இந்த படத்தில் அவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். வரும் நவம்பர் மாதம் 24ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரவுள்ளது.இதையும் படிங்க: Jailer collection: வசூலை வாரிக்குவிக்கும் ஜெயிலர்; தியேட்டர்களை அதகளப்படுத்தும் ரசிகர்கள்!!