ETV Bharat / entertainment

AK61 அப்டேட்...மீண்டும் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு - john kokken

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

AK61 அப்டேட்
AK61 அப்டேட்
author img

By

Published : Aug 16, 2022, 1:20 PM IST

’நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் குமார், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'AK61' என ரசிகர்களால் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

வங்கி கொள்ளை தொடர்பான கதையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், நடிகர் அஜித்துக்கு கிடைத்த பிரேக்கில் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். மேலும் திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று 4 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளி பதக்கங்களையும் வென்றார்.

AK61 அப்டேட்

இந்நிலையில் 'AK61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நாளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் அஜித் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

மேலும் இந்தப்படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன் ஆகியோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப்படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: என் நாட்டை நேசிக்கிறேன்.. அரசாங்கத்தை அல்ல.. பி.சி. ஸ்ரீராம் ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.