ETV Bharat / entertainment

யோகி பாபுவின் புரொடக்சன் நம்பர் 1 - வாழ்த்திய பிரபலங்கள்! - இயக்குநர் விஜய்

அஜய் அர்ஜூன் புரொடக்சன்ஸ் தயாரித்து, இயக்குநர் அஜயன் பாலா இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கும் புரொடக்சன் நம்பர் 1 படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர்கள் கலந்துகொண்டனர்.

யோகி பாபுவின் புரொடக்சன் நம்பர் 1
யோகி பாபுவின் புரொடக்சன் நம்பர் 1
author img

By

Published : Aug 3, 2023, 9:47 PM IST

சென்னை: யோகி பாபு நடிக்கும் புரொடக்சன் நம்பர் 1 புதிய படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொள்ளும் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட் , ரவி மரியா, ஸ்ரீராம் கார்த்திக் , டைகர் தங்கதுரை, முனீஸ்காந்த், கிருஷ்ணா , இயக்குநர்கள் பேரரசு, கே. பாக்யராஜ், மிஷ்கின், ஏ.எல். விஜய், சிங்கம் புலி, அஜயன் பாலா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இயக்குநர் மிஷ்கின், “சினிமாவில் பல மனிதர்கள், பெரிய ஆலமரங்களாக இருக்கிறார்கள். சில சுமை தாங்கிகள் இருக்கிறார்கள். சுமை தாங்கியில் ஒருவர் தான் இந்த படத்தின் இயக்குநர் அஜயன் பாலா. சுமை தாங்கியை விட்டு நகர்ந்து சென்று விடுவோம். சுமை தாங்கி அங்கேயே இருக்கும்.

100 படங்களின் வெற்றிக்குப் பின்னாலும், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட எனது படத்தின் வெற்றிக்கு பின்னாலும் அஜயன் பாலா இருந்திருக்கிறார். சமூகத்திற்கு நல்ல புத்தி சொல்ல வேண்டும் என்று கதையை எடுப்பவர். இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறினார்.‌

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரவி மரியா, “அஜயன் பாலா என்னுடைய நண்பர் என்பதை மீறி தமிழ்நாடு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர். நீண்ட காலமாக இயக்குநர் விஜய் படங்களுக்கு கதை, திரைக்கதை வசனத்துக்கு பேருதவி புரிந்த நண்பர்.

இதையும் படிங்க: மிரட்டும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

எல்லா படத்துலயும் உன் பேர் வருது. ஆனால், இயக்குநராக எப்போது வரப் போகிறாய் என்று பல நேரங்களில் கேட்பேன். எல்லாரும் சர்வேல இருந்து தான் படத்தை இயக்கியிருக்கிறார்கள். உண்மையில் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை” பல வருட நண்பரை வாழ்த்த வந்ததாகவும் கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் ஏ.எல் விஜய், “ரொம்ப எமோஷனலான மொமன்ட். 2008 ல் நா.முத்துக்குமார் மூலமாக அஜயன் பாலா பழக்கம். அவருடைய படங்களில் கதை, வசனம் என எல்லாவற்றிலும் உழைப்பு இருக்கும். மிஷ்கின் சொன்ன மாதிரி சுமை தாங்கி என்ற வார்த்தை சரியாக இருக்கும். அவருடன் நாங்கள் படம் பண்ணிருக்கோம் . இது 10 வருடம் முன்பு நடந்து இருக்க வேண்டும். தற்போது தான் படம் பண்ணுகிறார். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்” எனவும் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிங்கம் புலி, “ஆடிப்பெருக்கு அன்று இந்த படம் முத்தாய்ப்பாக துவங்கப்பட்டுள்ளது. அஜயன் பாலா மிகச்சிறந்த எழுத்தாளர். நல்ல இயக்குநர். இனி வரும் காலங்களில் இந்த மாதிரி நல்ல படங்கள் வரும்” என்றும் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பேரரசு, “இன்றைக்கு நிறைய சிறிய படங்கள் ஆரம்பித்து இருக்கிறார்கள். இதை சிறிய படமாகத் தான் துவங்குகிறார்கள். ஆனால், பெரிய படத்துக்கு ஹைப் தெரிகிறது. இன்றைக்கு நிறைய சிறிய படங்களை நிறைய பேர் ஆசைக்கு இயக்குகிறார்கள். சிலர் ஒரு படத்தில் ஒர்க் பண்ணி விட்டு இயக்குநராகிறார்கள். சிலர் எந்த படமும் ஒர்க் பண்ணாமல் இயக்குநராகி விடுகிறார்கள்.

அதனால் தரமான படங்கள் வருவது குறைந்துவிட்டது.‌ நிறைய சிறிய படங்களில் தரம் இல்லை, இது மிகப்பெரிய பின்னடைவை சினிமாவுக்கு கொண்டு வந்துவிடும். அஜயன் பாலாவை பொறுத்தவரை ரொம்ப திறமைசாலி” என்றும் அவரை பாராட்டி பேசினார்.

இதையும் படிங்க: நான் தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் எப்போதாவது சொன்னாரா? இயக்குநர் பேரரசு கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.