ETV Bharat / entertainment

ட்விட்டரில் சூடுபிடிக்கும் AK-63 படத்தின் அப்டேட் - இயக்குநர் யார்? - Ak 63 update

நடிகர் அஜித்தின் 63-வது படத்தை இயக்கப்போவது யார்? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ட்விட்டரில் சூடுபிடிக்கும் AK63 படத்தின் இயக்குநர் யார்?

author img

By

Published : Jan 27, 2023, 4:10 PM IST

சென்னை: இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து இந்த வருடம் 2023 பொங்கலுக்கு வெளியான திரைப்படம், துணிவு. போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வசூல் சாதனைப் படைத்தது.

இதனையடுத்து நடிகர் அஜித், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால், கதை தயார் செய்வதில் விக்னேஷ் சிவன் தாமதப்படுத்தி வருவதாகவும்; இதனால் அதிருப்தியில் இருக்கும் அஜித் இயக்குநரை மாற்றும் முடிவில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அதில் உண்மையில்லை என்றும்; விக்னேஷ் சிவன் தான் இயக்கப்போகிறார் என்றும், நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இருக்க, அஜித்தின் 63-வது படத்தை யார் இயக்குவார்? என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. "ட்விட்டர் ட்ரேக்கர்ஸ்" என்ற பெயரில் ஆளாளுக்கு ஒரு அப்டேட் வெளியிட்டு வருகின்றனர்.

10 வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என்று இருபிரமாண்ட வெற்றிப்படங்களை கொடுத்த அஜித்தின் ஃபேவரட் இயக்குநர் விஷ்ணுவர்த்தன் தான் ஏகே 63 படத்தின் இயக்குநர் என்றும், இப்படத்தை விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது என்றும், இணையத்தில் பரவி வருகிறது.

இன்னொரு பக்கம் நடிகர் விஜய்க்கு தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிகளை கொடுத்த அட்லீ குமார் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்றும், இதனை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் இப்படத்திற்கு ஏ.ஆர்‌.ரஹ்மான் இசை அமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு எல்லாம் மேலாக அஜித்தின் 63-வது படத்தை தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவர் புஷ்பா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தையும் லைகா தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் 62-வது படம் தொடங்குவதற்குள்ளேயே அடுத்த படத்தின் அப்டேட் ட்விட்டரில் சூடுபிடித்துள்ளது. அதனால் மேலும், அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:2 நாளில் ரூ.235 கோடி வசூல் சாதனை படைத்த ‘பதான்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.