ETV Bharat / entertainment

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் 'குஷி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! - majili

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள குஷி படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 7, 2023, 5:25 PM IST

ஹைதராபாத்: தென் இந்திய சினிமா உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ரொமான்டிக் திரைப்படம் ‘குஷி’. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தா நடித்துள்ளனர். 'குஷி' திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா குஷி படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'குஷி' படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாவதாகக் கூறியுள்ளார். மேலும் இந்த டிரெய்லர் 2 நிமிடங்கள் 41 விநாடி கொண்ட வீடியோ எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த டிரெய்லர் அறிவிப்புடன் குஷி படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் போஸ்டர் விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் நெருக்கமாக இருப்பது போல உள்ளது. ரசிகர்கள் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியை திரையில் காண ஆவலுடன் உள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிள் ‘ஆராத்யா’ என்ற பாடல் வெளியாகி இளைஞர்களை கவர்ந்தது. இந்த படத்தின் இயக்குநர் சிவா நிர்வாணா, இந்தப் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இந்தப் பாடல் யூடியூபில் 11 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ என்ற தோல்வி படத்திற்குப் பிறகு வெளியாகிறது. மஜிலி படத்திற்குப் பிறகு, இயக்குநர் சிவா நிர்வாணா சமந்தா கூட்டணியில் இரண்டாவது இணையும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை சமந்தா 'மயோடிசிஸ்' என்ற தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள பிரபல தெலுங்கு சினிமா நடிகரிடம் 25 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதையும் படிங்க: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் அதர்வாவின் "மத்தகம்"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.