ETV Bharat / entertainment

தியேட்டர் டிக்கெட் கட்டண விவகாரம்… விஜய் ஆண்டனி கூறிய ஐடியா என்ன? - kollywood news

முன்னணி நடிகர்கள் தனது ரசிகர் மன்றங்களுக்கு டிக்கெட் விலையில் சலுகைகள் கிடைக்க வழி செய்தால் நன்றாக இருக்கும் என தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வு விவகாரம் குறித்து விஜய் ஆண்டனி கூறினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 18, 2023, 5:54 PM IST

சென்னை: விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கொலை' படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் ஆண்டனி, ஆர்யா, மீனாட்சி சௌத்ரி, இயக்குநர் பாலாஜி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படம் வருகிற 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இவ்விழாவில் விஜய் ஆண்டனி பேசும்போது, 'எனக்கு நிறைய கவலைகள் இருக்கிறது. மூன்று நாயகிகள் என்று சொன்னார்கள். ஆனால், மீனாட்சி இந்தப் படத்தில் வேறு ஒருவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.‌ ரித்திகா எனக்கு தங்கை கதாபாத்தித்தில் நடித்துள்ளார். எனக்கு மனைவி கதாபாத்திரம் உண்டு. ஆனால், அந்த கதாபாத்திரம் என்னிடம் சரியாகக் கூட‌ பேசாது.

இப்படத்தில் நான் தான் 'கொலையினை' கண்டுபிடிக்க வேண்டுமாம். வேறு போலீசே இல்லையா?. இப்படத்தில் நான் கொஞ்சம் நடித்துள்ளேன் என்று நினைக்கிறேன். இப்படத்தின் சவுண்ட் இன்டர்நேஷனல் லெவலில் இருக்கும். இப்படத்தின் இயக்குநர் எலான் மஸ்க்கின் தங்கையின் நண்பர். எடிட்டரின் பணியும் சிறப்பானதாக இருந்தது. இப்படத்திற்கு சப்போர்ட் செய்ய வந்த ஆர்யாவுக்கு நன்றி. ஆர்யாவை பார்த்தால் பல விஷயங்களில் பொறாமையாக உள்ளது. படத்தை பார்த்துவிட்டு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த விஜய் ஆண்டனி கூறியது, ''எனக்கு மூன்று கதாநாயகிகள் என்று சொன்னதும் ஓ.கே. சொல்லிவிட்டேன். ஆனால், கதை கேட்கும்போது தான் தெரிந்தது. எனக்கு ஒரு பாட்டு கூட இல்லையே என்று. நானும் அஜித் போல் முன்னணி நடிகராக வந்ததால் இன்னும் வெள்ளை முடி வைத்து நடிக்கிறேன்'' என்றார். மேலும் 'எனக்கு எந்த நடிகையுடனும் தொடர்பு இல்லை.‌ நான் யாருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள்' என்று கலகலப்பாக பேசினார்.

மேலும் வருகிற செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி சென்னையில் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார். தனது திரை வாழ்வில் இருபது இசை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்திவிட்டு செல்ல வேண்டும் என்பதே எனது ஆசை எனவும் கூறினார்.

அப்போது, திரையரங்குகள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபற்றி பேசிய விஜய் ஆண்டனி, ரசிகர்களுக்கு சுய கட்டுப்பாடு முக்கியம் என்றும்; முன்னணி நடிகர்கள் தனது ரசிகர் மன்றங்களுக்கு டிக்கெட் விலையில் சலுகைகள் கிடைக்க வழி செய்தால் நன்றாக இருக்கும் என்றும் நான் நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

நடிகர் ஆர்யா பேசும் போது, ''நானும் விஜய் ஆண்டனியும் ஆரம்ப கால நண்பர்கள். வாய்ப்பு தேடும் காலத்தில் அவர் எனக்கும் நான் அவருக்கும் உதவி செய்து கொள்வோம். அப்போது நிறைய பேர் சுயநலமானவர்களாக இருப்பார்கள். அதையும் தாண்டி நாங்கள் 20 ஆண்டுகளாக நண்பர்கள். எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தவர், விஜய் ஆண்டனி. இந்தப் படத்தின் தலைப்பும் அதன் வடிவமும் தனித்துவமாக இருந்தது. விஜய் ஆண்டனியின் கதை தேர்வு எப்போதும் வித்தியாசமானதாக இருக்கும். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்'' என்றார்.

இதையும் படிங்க: ப்ராஜெக்ட் கே படத்தில் தீபிகா படுகோனே லுக் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.