சென்னை: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துவிட்டார். அதுமட்டுமின்றி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டார். இவர் நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது காதல் மலர்ந்தது.
இருவரும் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு ஷாருக்கான் நேரில் வந்து வாழ்த்தினார். ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்தார். இதன் வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது வரை அதுகுறித்த தகவல் இல்லை. அதன்பிறகு வாடகைத் தாய் மூலம் நயன்தாரா இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நயன்தாரா கடந்த 18ஆம் தேதி தனது 39வது பிறந்த நாளை கொண்டாடினார்.
![நயன்தாராவுக்கு சொகுசு கார் பரிசளித்த விக்னேஷ் சிவன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-12-2023/tn-che-05-nayanthara-car-script-7205221_01122023151213_0112f_1701423733_679.jpg)
நயன்தாரா பிறந்த நாளுக்கு அவரது ஆசை கணவர் விக்னேஷ் சிவன் விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். இதன் மதிப்பு சுமார் 3 கோடியே 40 லட்ச ரூபாய் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த நயன்தாரா பிறந்த நாள் பரிசுக்கு தனது கணவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் ’வெல்கம் ஹோம் யூ பியூட்டி’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் ’இந்த அன்பு பிறந்தநாள் பரிசுக்கு நன்றி’ என்றும் பதிவிட்டுள்ளார். நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி என்ற திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
![அன்னபூரணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-12-2023/tn-che-05-nayanthara-car-script-7205221_01122023151213_0112f_1701423733_762.jpg)
இதையும் படிங்க: 'குட் நைட்' கூட்டணியின் அடுத்த படைப்பான "லவ்வர்" ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!