ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் திரைப்பட நடிகர் கைகாலா சத்தியநாராயணா இன்று (டிசம்பர் 23) உடல்நலக்குறைவு காரணமாக பிலிம்நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை (டிசம்பர் 24) ஜூப்ளி ஹில்ஸில் நடைபெற உள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சத்யநாராயணா 1935ஆம் ஆண்டு கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கௌதாரம் கிராமத்தில் பிறந்தார். குடிவாடா கல்லூரியில் தனது பட்டப்படிப்பின்போதே நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் பல நாடக நிழச்சிகளை நடத்தினார். இவரது நடிப்பு திறமையை கண்ட பிரபல தயாரிப்பாளர் டி.எல்.நாராயணா அவருக்கு 'செப்பை குதுறு' படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.
இதையடுத்து புராண, நாட்டுப்புற, கமர்ஷியல் என அனைத்து வகை படங்களிலும் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்தார். அந்தவகையில் என்டிஆர், ஏஎன்என்ஆர், கிருஷ்ணா, ஷோபன் பாபு முதல் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, வெங்கடேஷ் வரை பல்வேறு படங்களில் இவர் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரபல நடிகை வீட்டில் தீ விபத்து