ETV Bharat / entertainment

படப்பிடிப்பு தளத்தில் உதவிகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் சேலம் மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் உதவிகள் வழங்கினார்.

உதவிகள் வழங்கிய உதயநிதி
உதவிகள் வழங்கிய உதயநிதி
author img

By

Published : Sep 13, 2022, 10:54 PM IST

சேலம்: உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக சேலம் மாவட்டம், ஜருகுமலையில் உள்ள அரசு பள்ளிக் கட்டடம் “நமக்கு நாமே” திட்டத்தில் புதுப்பிப்பதற்கான பணிகள் இன்று தொடங்கப்பட்டன. அதில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பங்களிப்பு தொகையாக ரூ.13,60,000 “மாமன்னன்” படப்பிடிப்பு தளத்தில் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதில் சார் ஆட்சியர் பாலசந்தர், மாவட்ட கல்வி அலுவலர் முருகன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் பஹத் பாசில், மாமன்னன் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஈஸ்வர், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அறங்காவலர் பாபு, ராஜா, ராஜ்குமார், தர்மராஜ், நடராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஜருகுமலை மலைப் பாதையில் வளைவில் எதிர்வரும் வாகனங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் (குவியாடி) Convex Mirror 10 மற்றும் அங்கு வசிக்கும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: "Man of Mass" அஜித் புகைப்படத் தொகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.