ETV Bharat / entertainment

'தளபதி 68' திரைப்பட அறிவிப்பு எனக்கு ஸ்பெஷல் பிறந்தநாள் பரிசு - நடிகை லைலா உற்சாகம்! - தமிழ் சினிமா செய்திகள்

Thalapathy 68: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68வது படத்தில் தான் நடிப்பதாக வெளியான அறிவிப்பு, பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளதாக நடிகை லைலா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை லைலா
நடிகை லைலா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 5:44 PM IST

நடிகை லைலா

சென்னை: நடிகை லைலா தமிழ் சினிமாவில் கன்னக்குழி அழகியாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற படத்தின் மூலம் நடிகை லைலா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரோஜா வனம், முதல்வன், பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில் என ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானார். பாலா இயக்கத்தில் வெளியான நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

நடிகை லைலா தமிழில் கடைசியாக அஜித் நடித்த திருப்பதி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தனது துறுதுறு நaடிப்பால் அனைவரையும் கவர்ந்த லைலா, கடந்த ஆண்டு கார்த்தி நடித்து வெளியான சர்தார் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். மேலும் எஸ்ஜே சூர்யா நடித்த வதந்தி என்ற இணைய தொடரிலும் வில்லி வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது சப்தம் என்ற படத்தில் நடித்து வரும் லைலா, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இன்று வெளியான ’தளபதி 68’ பூஜை வீடியோவில் லைலாவும் இருந்தார். அது மட்டுமின்றி இன்று லைலா தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை ஒட்டி இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் ”எனது பிறந்த நாள் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல் பரிசை கொடுக்கும். அந்த வகையில் இந்த வருடம் பிறந்தநாளுக்கு பிதாமகன் 20 ஆண்டுகள், சர்தார் வெளியாகி ஒரு வருடம் நிறைவு, தற்போது விஜய் நடிக்கும் 68வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார். 90களில் அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகையாக வலம் வந்த லைலா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கேரளாவில் லோகேஷை சூழ்ந்த ரசிகர்கள்.. காலில் காயம்... போலீசார் லத்தி சார்ஜ்.. என்ன நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.