ETV Bharat / entertainment

மாஸ் காட்டிய ’மைக்கேல்’ படத்தின் டீசர்..! - Teaser of Michael shown by Mass

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கவனத்தை ஈர்க்கும் தனுஷ் வெளியிட்ட மைக்கேல் படத்தின் டீசர்

author img

By

Published : Oct 21, 2022, 4:06 PM IST

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், கரண் சி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் பான் இந்தியப் படைப்பாகத் தயாரித்து வரும் திரைப்படம் 'மைக்கேல்'. இதில் நடிகர் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் நடித்திருக்கிறார்கள்.

‘மைக்கேல்' படத்தின் தமிழ் டீசரை நடிகர் தனுஷும், தெலுங்கு டீசரை நடிகர் நானியும், மலையாள டீசரை நடிகர் துல்கர் சல்மானும், கன்னட டீசரை நடிகர் ரக்சித் ஷெட்டியும் வெளியிட்டனர். இந்தி டீசரை நடிகர் ராஜ்குமார் ராவ், நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜான்வி கபூர், இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே ஆகியோர் வெளியிட்டனர்.

டீசரில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும், கௌதம் வாசுதேவ் மேனனின் வில்லத்தனம் கலந்த காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. இதன் கதை 80களில் தொடங்குவது போன்று அமைக்கப்பட்டிருப்பதால், நடிகர்களின் கெட்டப்புகள் மற்றும் அரங்கங்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது.

டீசரின் தொடக்கத்தில்,'‘மைக்கேல்! வேட்டையாடத் தெரியாத மிருகத்த மத்த மிருகங்கள் வேட்டையாடிடும் மைக்கேல்” என்ற வசனத்திற்கு,“ துரத்துற பசியிலிருக்கிற மிருகத்துக்கு வேட்டை தெரியனும்னு அவசியமில்ல மாஸ்டர்” என நாயகன் பதிலளிக்கும் வசனங்களும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகிய மூவரின் முரட்டுத்தனமான அவதாரங்களிலிருந்து ஆக்சன், அழுத்தமான உரையாடல்கள், ரம்மியமான காதல் காட்சி ஆகியவை இடம்பெற்று, டீசரை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. மேலும் 'மைக்கேல்' திரைப்படம் ஒரு காவிய கதை களத்துடன் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களின் தொகுப்பாகவும் இருக்கிறது.

இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார், அனசுயா பரத்வாஜ், நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோரும் இடம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மூலம் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். கிரண் கௌஷிக்கின் ஒளிப்பதிவும், சாம் சிஎஸ்-ன் பின்னணி இசையும் டீசரை மீண்டும் மீண்டும் காணத் தூண்டுகிறது. இந்தப் படத்திற்கான வசனங்களை திரிபுராநேனி கல்யாண் சக்கரவர்த்தி, ராஜன் ராதாமணாளன், ரஞ்சித் ஜெயக்கொடி ஆகியோர் எழுதியுள்ளனர்.

'மைக்கேல்' படத்தின் டீசர், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: வெளியானது பிரின்ஸ், சர்தார்... தீபாவளி ரேஸில் புது காம்போ...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.