ETV Bharat / entertainment

இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமா தான் என்பதை மாற்றிய தமிழ் சினிமா..!

author img

By

Published : Oct 18, 2022, 9:44 PM IST

இந்த ஆண்டு வெளியாகி வர்த்தக ரீதியாக இந்திய சினிமாவை ஆதிக்கம் செய்த தமிழ் படங்கள் குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்.

இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமா தான் என்பதை மாற்றிய தமிழ் சினிமா

இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் வசூல் என்றால் அது இந்திப் படங்கள்தான். பிரம்மாண்டமான பட்ஜெட் மற்றும் அதிக வியாபாரம் பாலிவுட் படங்களுக்குத் தான் கிடைத்தது. தற்போது வரையிலும் 100க்கும் மேற்பட்ட இந்திப் படங்கள் சுமார் 100கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளன. ஆனால் கரோனாவிற்கு பிறகு இந்திப் படங்கள் மோசமான தோல்வியைச் சந்தித்து வருகின்றன.

அதற்குக் காரணம் கரோனா அல்ல. முன்னணி நடிகர்களின் படங்களே மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தன. பாலிவுட் என அழைக்கப்படும் இந்தி சினிமா தற்போது அதளபாதாளத்தில் தத்தளித்து வருகிறது. காரணம் பாய்காட் பிடியில் பாலிவுட் சிக்கியிருப்பதுதான்.

சகிப்புத்தன்மை குறித்து எப்போதோ பேசியிருந்தார் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமீர்கான். அதனை தொடர்ந்து அவரது படங்களைப் புறக்கணிக்கத் துவங்கினர் அங்குள்ள ரசிகர்கள். அதன் விளைவு அமீர்கானின் ’லால் சிங்கா சத்தா’ மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து வந்த மற்ற நடிகர்களின் படங்களும் ஏதோ ஒரு காரணத்தால் பாய்காட் செய்யப்பட்டது. சமீபத்தில் வெளியான தமிழ்ப் படத்தின் ரீமேக்காக ’விக்ரம் வேதா’ மட்டும் தட்டுத்தடுமாறி 100 கோடி ரூபாய் பட்டியலில் இணைந்தது.

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரையில் ’ஆர்ஆர்ஆர்’ படம் ரூ.1,000 கோடி வரை வசூலித்து இமாலய சாதனை படைத்தது. ஆனாலும் மற்ற படங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை. கன்னட சினிமாவில் ’கேஜிஎப் இரண்டாம் பாகம்’ வெளியாகி கன்னட சினிமாவின் முகத்தையே மாற்றியமைத்தது.

அதனைத் தொடர்ந்து வந்த ’விக்ராந்த் ரோணா’, ’ஜேம்ஸ்’, ’சார்லி777’ ஆகிய படங்கள் நல்ல வசூலைப் பெற்றன. தற்போது வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் ’காந்தாரா’ படம் கன்னட சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது. ஆனாலும் வசூல் என்று பார்த்தால் 100 கோடி ரூபாய் தான்.

இப்படி மற்ற மொழிகளில் சொல்லிக்கொள்ளும்படி அவ்வப்போது வெற்றிகளைப் பெற்று வந்தாலும் இந்திய சினிமாவை தலை நிமிர வைத்தது யார் என்றால் அது தமிழ் சினிமாதான். ஆண்டு தொடக்கத்தில் வெளியான விஜயின் ’பீஸ்ட்’ மற்றும் அஜித்தின் ’வலிமை’ ஆகிய படங்கள் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்தன. சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’, சிவகார்த்திகேயனின் ’டான்’ ஆகிய படங்கள் ரூ.100 கோடியை வசூலித்தது.

இதற்கு எல்லாம் மேலாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.430 கோடிக்கும் மேல் வசூலித்தது. கரோனா தாக்கத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு ’விக்ரம்’ திரைப்படத்தின் இந்த வெற்றி மிகவும் முக்கியமானதாக அமைந்தது. வீடுகளுக்குள் முடங்கி இருந்த ரசிகர்களைத் திரையரங்குகள் நோக்கி வரவழைத்தது என்றே சொல்லலாம்.

என்னதான் ’ஆர்ஆர்ஆர்’, ’கேஜிஎப்’ எல்லாம் இருந்தாலும் ஒரு தமிழ் சினிமா ரசிகனாகத் தமிழ் படத்திற்கு கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் திரையரங்குகளில் படையெடுத்தது சந்தோஷம் அளிப்பதாக இருந்தது. இந்த வெற்றியைப் பார்த்து பாலிவுட்டே மிரண்டது.

இவற்றைத் தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் ரூ‌.500 கோடி வசூலை நெருங்கி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரையரங்குகளில் இப்படத்தைக் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு ’சர்தார்’ மற்றும் ’பிரின்ஸ்’ படங்கள் வெளியாகின்றன. எப்படியும் இவ்விரு படங்களும் 100 கோடி ரூபாய் வசூலித்து விடும் என்பது உறுதி.

இப்படி மொழி சினிமாக்கள் எல்லாம் இந்த ஆண்டு திணறி வரும் நிலையில் தமிழ் சினிமா மட்டும் மிகப் பெரிய பிரம்மாண்டமாக வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயம். இங்கு மட்டுமின்றி உலகம் கடந்தும் இதன்‌ வெற்றி எதிரொலித்துள்ளது பாராட்டத்தக்கது.

இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமா மட்டும் தான் என்ற நிலை மாறி தென்னிந்திய சினிமாக்கள் உலக அளவில் ஆதிக்கம் செலுத்துவது வரவேற்கத்தக்கது. குறிப்பாகத் தமிழ் சினிமா தனது அடுத்த கட்ட பாய்ச்சலை ஆரம்பித்துள்ளது வியாபார ரீதியில் முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் புனை கதை தான், ஆனால்! - மணிரத்னம் கூறும் நெகிழ்ச்சிக்கதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.