டெல்லி: 68ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று(செப்.30) மாலை டெல்லியிலுள்ள விக்யன் பவனில் நடைபெற்றது. இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மூ, தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படக் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி சிறந்த நடிகர்களுக்கான விருதுகளை ‘சூரறை போற்று’ திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவும், ’தன்ஹாஜி’ திரைப்படத்திற்காக நடிகர் அஜய் தேவ்கனும் பெற்றுக்கொண்டனர்.
திரைத்துறையின் உயரிய விருதான தாதா பால்கே விருதை பாலிவுட் நடிகை ஆஷா பாரேக் பெற்றுக்கொண்டார். மேலும், தேசிய விருது பெறும் முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்த பென்மணியான நாச்சியம்மா, தனது ‘கலக்காத்த சந்தன மேரம்...!’ பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.
இந்தி இயக்குநர் விபுல் ஷா தலைமையில் 10 பேர் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ஒளிப்பதிவாளர் மற்றும் தேர்சுக் குழு உறுப்பினரான தரம் குலாட்டி அறிவித்தார்.
இந்தத் தேர்வுக்குழுவில், தேசிய விருது பெற்ற பெங்காலி நடிகை ஸ்ரீலேகா முகர்ஜீ, ஒளிப்பதிவாளர் ஜி.எஸ்.பாஸ்கர், கார்த்திக் ராஜா, வி.என்.ஆதித்யா, விஜி தாம்பி, சஞ்சீவ் ரட்டான், தங்கதுரை, நிஷிகந்தா ஆகியோர் இடம்பெற்றனர்.
இதையும் படிங்க: ஐஷ்வர்யா ராயை பார்த்தால் பொறாமையாக உள்ளது - நடிகை மீனா