ETV Bharat / entertainment

'பருந்தாகுது ஊர்க்குருவி' - பாலிவுட் சினிமாவில் சூர்யா! - hindi soorarai potru

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் ஹிந்தியில் தயாராகி வரும் 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கேமியோ ரோலில் சூர்யா
மீண்டும் கேமியோ ரோலில் சூர்யா
author img

By

Published : Jun 15, 2022, 8:01 PM IST

2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படமான 'சூரரைப் போற்று', கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியது. கரோனா காலகட்டத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்களின் இடையே பெறும் வரவேற்பைப்பெற்றது.

தமிழில் கிடைத்த வரவேற்பைத்தொடர்ந்து இந்தத் திரைப்படம் இந்தியிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் (Abundantia Entertainment) நிறுவனத்தினர் இணைந்து தயாரிக்கின்றனர்.

படப்பிடிப்புத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இத்திரைப்படத்தில் சூர்யா சிறப்புத்தோற்றத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதனை உறுதிபடுத்தும் வகையில் சூர்யா, அக்‌ஷய் குமாருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ''ஹிந்தியில் தயாராகும் 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் சுருக்கமான சிறப்புத்தோற்ற ரோலில் நடித்துள்ளேன். கதை அழகாக மீண்டும் உயிர் பெறுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக சமீபத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்திலும் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிவாஜியின் வெற்றிக்கு நன்றி - சிறப்பு ஆடியோ வெளியிட்ட ரஜினி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.