ETV Bharat / entertainment

கனா காணும் காலங்கள் தொடரில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்த பாடல்!! - kanaa kaanum kaalangal

டிஸ்னி ஹாட்ஸ்டார் வழங்கும் “கனா காணும் காலங்கள்” தொடருக்காக, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் சிறப்பு ஆந்தம் பாடல், சோனி மியூசிக் யூடுயூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

கனா காணும் காலங்கள் தொடரில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்த பாடல்

author img

By

Published : Jul 16, 2022, 11:04 AM IST

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தலைமுறை தாண்டி ரசிகர்களை கவர்ந்து வரும், “கனா காணும் காலங்கள்” தொடரின் புதிய சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இத்தொடர் அதன் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான இசை விருந்தை அளித்துள்ளது. இத்தொடருக்காக மகிழ்ச்சியான மற்றும் வேடிக்கை நிறைந்த பள்ளி நினைவுகள் போற்றும் ‘எல்லாமே ஜாலி தான்’ என்னும் தீம் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஆதித்யா ஆர்.கே பாடியுள்ளார்.

சோனி மியூசிக் சவுத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட இந்த பாடல், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ‘கனா காணும் காலங்கள்’ தொடர் வெறும் நிகழ்ச்சி என்பதை தாண்டி பள்ளி வாழ்வின் நினைவுகளை கிளறும் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

கனா காணும் காலங்கள் தொடர் இப்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், புதிய எபிசோடுகளுடன் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022 - டீஸர் காணொலியை வெளியிட்ட ரஜினி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.