சென்னை: தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், கதாநாயகியாக சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இன்னும் பல மொழிகளிலிருந்தும் சாக்ஷி அகர்வாலுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
முன்னதாக, பிக்பாஸ் மூலம் அனைவராலும் சாக்ஷி அகர்வால் அறியப்பட்டார். தற்போது தமிழ்த் திரையுலகில் நாயகியாக வித்தியாசமான வேடங்கள் மூலம் தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆக்ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் சாக்ஷியின் திறமை பிற மொழி படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்துப் பெண் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சாக்ஷி.
தற்போது தமிழில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, ரஜித் கண்ணா இயக்கத்தில் உருவாகும் திரில்லர் படமான 'சாரா'வில் பரபரப்பாக நடித்து வருகிறார். மேலும், குக் வித் கோமாளி புகழ்-க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அத்துடன், 'கெஸ்ட் 2' உள்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
-
My next film titled #SAARA, an interesting thriller, poojai ceremony is tomorrow . Happy that #Ilayaraja sir & @Bharathiraja sir , Legends of Indian cinema will be gracing the event with their presence. Keep us in your prayers and more intresting updates soon @ssakshiagarwal… pic.twitter.com/LgKkYzcm0D
— Sakshi Agarwal (@ssakshiagarwal) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My next film titled #SAARA, an interesting thriller, poojai ceremony is tomorrow . Happy that #Ilayaraja sir & @Bharathiraja sir , Legends of Indian cinema will be gracing the event with their presence. Keep us in your prayers and more intresting updates soon @ssakshiagarwal… pic.twitter.com/LgKkYzcm0D
— Sakshi Agarwal (@ssakshiagarwal) September 17, 2023My next film titled #SAARA, an interesting thriller, poojai ceremony is tomorrow . Happy that #Ilayaraja sir & @Bharathiraja sir , Legends of Indian cinema will be gracing the event with their presence. Keep us in your prayers and more intresting updates soon @ssakshiagarwal… pic.twitter.com/LgKkYzcm0D
— Sakshi Agarwal (@ssakshiagarwal) September 17, 2023
க்யூட் ஹீரோயினாக கலக்கி வரும் சாக்ஷி அகர்வாலுக்கு தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து, பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கி உள்ளன. விரைவில், சாக்ஷி அகர்வாலை பாலிவுட் படத்திலும் காணலாம். இந்த தீபாவளி சாக்ஷி அகர்வாலுக்கு மிகப்பெரும் கொண்டாட்டமாக, பான் இந்தியா தீபாவளியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:யார் இந்த குரூஸ் பர்ணாந்து? தூத்துக்குடி நகரத் தந்தைக்கு இன்று மணிமண்டபம் திறப்பு!