ETV Bharat / entertainment

Robo Shankar:'கட்டை விரலையாவது தொட்டுக்கிறேன்' ஹன்சிகாவை கொச்சையாக பேசிய ரோபோ சங்கர்

'பாட்னர்' படக்குழுவினர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகை ஹன்சிகா குறித்து ரோபோ சங்கர் இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 1, 2023, 8:38 PM IST

சென்னை: 'பாட்னர்' படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய ரோபோ சங்கர், நடிகை ஹன்சிகாவை இழிவாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் இவ்வாறு பேசியதற்கு ஜான் விஜய் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இயக்குநர் சற்குணத்தின் உதவி இயக்குநர் மனோஜ் இயக்குநராக அறிமுகமாகி, ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள 'பாட்னர்' (Partner) படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜூலை 1) சென்னை வடபழனியில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆதி, ஹன்சிகா, முனீஸ்காந்த், பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

'பாட்னர்' என்ஜாய்மெண்ட் படம்: இந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ஆதி, 'முதலில் கதையை போனில் தான் சொன்னதாகவும், போனில் கதையைக் கேட்டதும் ஆர்வமாக இருந்ததாகவும் கூறினார். இந்த பாட்னர் படத்தை கண்டிப்பாக என்ஜாய் பண்ணலாம் என்றும் ரொம்ப யோசித்தால், உங்களுக்கான படம் இதில்லை என நினைப்பதாகவும் கூறினார்.

கட்டை விரலையாவது தடவிக் கொள்கிறேன்: இவரைத்தொடர்ந்து பேசிய ரோபோ சங்கர், 'ஹன்சிகா ஒரு மெழுகு பொம்மை என்றும் மைதா மாவை உருட்டி சுவற்றில் எறிந்தால் ஒட்டிக்கொள்வதைப் போல தான் அவரும் என்று புகழ்ந்தார். மேலும் பேசிய அவர், இந்தப் படத்தின் ஒரு காட்சியில் ஹன்சிகாவின் முட்டிங்காலிற்கு கீழே ஒரு பொருளைத் தேடி நான் தடவ வேண்டும் என்ற ஷாட் வந்ததாகவும், இதற்காக அவரிடம் எவ்வளவோ போராடி கேட்டதற்கு ஹன்சிகா முடியாது என மறுத்துவிட்டதாக கூறினார். வேண்டுமெனில், கட்டை விரலையாவது தடவிக் கொள்கிறேன் என்றும் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் கூறிய ரோபோ சங்கர், 'ஹீரோ ஆதி மட்டும் தான் தொட வேண்டும், மற்றவர்கள் கூடாது என்று ஹன்சிகா கூறிவிட்டார். அப்போது தான் நினைத்தேன். ஹீரோ ஹீரோ தான். காமெடியன் ஓரமாகத்தான் இருக்க வேண்டும்' என்பது‌ என்றும் தெரிவித்தார். அதன்பிறகு விமானத்திற்கு நேரமானதால் ரோபோ சங்கர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

கொந்தளித்த செய்தியாளர்கள்: இதன்பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் தருணத்தில், 'ரோபோ சங்கர் சபை நாகரிகம் இன்றி இத்தனை பேர் அமர்ந்திருக்கும் மேடையில் நாயகியை இப்படி இழிவாக பேசுவது தவறு என்று பத்திரிகையாளர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும், ரோபோ சங்கர் போன்று மேடையில் கதாநாயகியை இழிவாக பேசும் நபரை இனி அழைக்காதீர்கள்' என்று செய்தியாளர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மன்னிப்பு கோரிய ஜான் விஜய்: அப்போது செய்தியாளர்களிடையே பேசிய ஜான் விஜய், 'ரோபோ சங்கர் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை என்று நினைப்பதாகவும், படக்குழு சார்பாக அவரின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்' என்றார். இதனால், நிகழ்ச்சியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ரோபோ சங்கர் மீது ஏற்கனவே இதுபோன்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்‌ எப்போதுமே சபை நாகரிகம் இன்றி இதுபோன்று பேசிவிடுவதாக இவர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையில் 2வது இன்னிங்ஸ்: சமீபகாலமாக மது பழக்கத்திற்கு அடிமையாகி வரும் ரோபோ சங்கர், மது பழக்கத்திற்கு அடிமையானதால் உடல்நிலை மோசமாகி தற்போது வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸ் எடுத்திருப்பதாக உருக்கமாக தெரிவித்திருந்தார். இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் இவ்வாறு ஹன்சிகா குறித்து ரோபோ சங்கர் பேசிய விதம் செய்தியாளர்கள் மட்டுமின்றி அங்கிருந்த அனைவரிடமும் அதிருப்தியை கிளப்பியுள்ளது. இவரின் இப்பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து சொன்ன நடிகர் ஆனந்த் ராஜ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.