இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்து கடந்த 30ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை குவித்து வருகிறது.
கல்கியின் நாவலை தழுவி உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயம் ரவி, அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயம் ரவியை அழைத்து பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ஜெயம் ரவி பதிவிட்டுள்ள ட்வீட்டில், உங்களுடன் 1 நிமிட உரையாடல் எனது வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை சேர்த்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா. நீங்கள் திரைப்படத்தையும், எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது - வெற்றிமாறனுக்கு கருணாஸ் ஆதரவு!