சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் மலேசிய சுற்று பயணம் சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்துள்ளார். இது குறித்து மலேசிய நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது X சமூக வலைத்தள பக்கத்தில் ரஜினியுடன் ஏற்பட்ட சந்திப்பு குறித்த செய்தியை புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், தான் ஆசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கலை உலகில் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை சந்தித்ததாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர் மலேசியாவின் மக்களின் கஷ்டங்களை பற்றி கேட்டதாகவும், அவருடைய அடுத்து வெளி வரக்கூடிய படங்களை குறித்து பகிர்ந்ததாகவும், தான் அவர் மென்மேலும் புகழ் பெற இறைவனை பிராத்திப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
-
Hari ini saya menerima kunjungan bintang filem India, Rajinikanth yakni satu nama yang tidak asing lagi di pentas dunia seni asia dan antarabangsa.
— Anwar Ibrahim (@anwaribrahim) September 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Saya hargai penghormatan yang diberikan beliau terhadap perjuangan saya khasnya terkait isu kesengsaraan dan penderitaan rakyat.… pic.twitter.com/Sj1ChBMuN6
">Hari ini saya menerima kunjungan bintang filem India, Rajinikanth yakni satu nama yang tidak asing lagi di pentas dunia seni asia dan antarabangsa.
— Anwar Ibrahim (@anwaribrahim) September 11, 2023
Saya hargai penghormatan yang diberikan beliau terhadap perjuangan saya khasnya terkait isu kesengsaraan dan penderitaan rakyat.… pic.twitter.com/Sj1ChBMuN6Hari ini saya menerima kunjungan bintang filem India, Rajinikanth yakni satu nama yang tidak asing lagi di pentas dunia seni asia dan antarabangsa.
— Anwar Ibrahim (@anwaribrahim) September 11, 2023
Saya hargai penghormatan yang diberikan beliau terhadap perjuangan saya khasnya terkait isu kesengsaraan dan penderitaan rakyat.… pic.twitter.com/Sj1ChBMuN6
ஜெயிலர் படத்தின் வெளியீடு சமயத்தில் ஆன்மீக பயண்மாக இமையமலை சென்ற ரஜினிகாந்த், உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தயநாத், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்தது ரசிகர் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியது.
இந்நிலையில் தற்போது மலேசிய நாட்டு பிரதமரையும் நடிகர் ரஜினிகாந்த் சந்திதுள்ளார். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தை வரவேற்கும் போது மலேசிய பிரதமர் அனவர் இப்ராஹிம், ரஜினி நடித்த 'சிவாஜி' படத்தில் ரஜினி செய்யும் மொட்டை பாஸ் செய்கையை செய்து கூறப்படுகிறது
நடிகர் ரஜினிகாந்திற்க்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்ரஸ் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் படம் உலக அளவில் 600 கோடி ரூபாய் கடந்து வசுல் சாதனை படைத்துள்ளது
அதனை தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்த படம் லைகா நிறுவனம் தயாரிக்க, 'ஜெய்பீம்' பட இயக்குநர் TJ ஞானவேல் இயக்க உள்ளார். இந்த படம் சமூகம் சார்ந்த ஒரு படமாக அமையும் என ரசிகர்கள் பெரிதும் எதிர் பார்த்தபடி உள்ளனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், அதை உறுதிபடுத்தும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் ரஜினிகாந்த 171வது படத்தை லோக்கேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், அனிருத் இசை அமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: Jigarthanda Double X.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர் வெளியீடு!