சென்னை: தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக வளர்ந்து வருபவர், மாரி செல்வராஜ். இவரது படங்கள் எப்போதுமே சமமூநீதி, பட்டியலின மக்களின் வலி உள்ளிட்டவற்றை முதன்மையாக பேசும். பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்கள் அப்படித்தான்.
இந்த நிலையில் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கிய படம் மாமன்னன். இப்படத்தில் நடிகர் வடிவேலு மாமன்னன் என்ற முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுதான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் ஆகும். இப்படத்தில் வடிவேலு உள்ளிட்ட அனைவரது நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. வடிவேலு இதுவரை இல்லாத அளவில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: Maamannan: மாரி செல்வராஜ்-க்கு கார் பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்!
அரசியல் கட்சிகளுக்குள் இருக்கும் சாதி அரசியலைப் பேசுகிறது மாமன்னன் திரைப்படம். ஆதிக்க சாதியினரால் எப்படி பட்டியலின எம்எல்ஏ நடத்தப்படுகிறார் என்பதை எந்தவித பூச்சுகளும் இல்லாமல் மாரி செல்வராஜ் பதிவு செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இப்படத்தை பார்த்து கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அவரது பதிவில், “மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
-
#MAAMANNAN
— Rajinikanth (@rajinikanth) July 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.
">#MAAMANNAN
— Rajinikanth (@rajinikanth) July 4, 2023
சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.#MAAMANNAN
— Rajinikanth (@rajinikanth) July 4, 2023
சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.
தமிழ்நாடு முழுவதும் திரையிட்ட இடங்களில் மாமன்னன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நடிகர் ரஜினி உள்ளிட்ட திரைத்துறையினர் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி வருவது படக்குழுவினரை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாமன்னன் படத்தின் வெற்றிக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு புதிய கூப்பர் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "பாராசக்தி முதல் மாமன்னன்" வரை பா.ரஞ்சித்துக்கு பதிலளித்த உதயநிதி