ETV Bharat / entertainment

'தளபதி 68’ படத்தின் தலைப்பு என்ன? சஸ்பென்ஸ் உடைத்த அர்ச்சனா கல்பாத்தி! - kollywood updates

Thalapathy 68 title: தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ‘தளபதி 68’ படத்தின் தலைப்பு குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

தளபதி 68
தளபதி 68
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 1:34 PM IST

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 68வது திரைப்படத்தை, ஏஜிஸ் எண்டர்டெய்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. புதிய கீதை படத்திற்குப் பிறகு, 20 வருடம் கடந்து விஜய்-யுவன் கூட்டணி இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

கடந்த மே 21ஆம் தேதி நடிகர் விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அறிவிப்பு வீடியோ வெளியானது. இதனை அடுத்து ‘தளபதி 68’ படத்தின் பூஜை வீடியோ கடந்த அக்டோபர் 24ஆம் தேதி வெளியானது. அந்த வீடியோவில், புதிய கெட்டப்பில் இருந்த விஜய்யின் லுக் ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன், ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனி, தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், எடிட்டர் வெங்கட் ராஜன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் ’தளபதி 68’ படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனிடையே, இப்படத்தின் தலைப்பை ரசிகர்கள் யூகித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் பாஸ், ஃபசில் (Puzzle) என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தது. இதனையடுத்து அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ”தற்போது தான் அனைத்து அப்டேட்களையும் பார்த்தேன்.

உங்களது அன்புக்கு நன்றி. உண்மையான தலைப்புக்கு பொறுமையாக காத்திருங்கள். வெங்கட் பிரபு மிகவும் ஸ்பெஷலான ஒன்றை சமைத்து வருகிறார். அது பாஸ், ஃபசில் கிடையாது” என்று பதிவிட்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: சர்வதேச திரைப்பட விழாக்களில் மிளிரும் சூரி.. 'ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படமும் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.