ETV Bharat / entertainment

பிருத்விராஜின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடுஜீவிதம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! - tamil cinema updates

Aadujeevitham: பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகி இருக்கும் ஆடுஜீவிதம் (the goat life) உலகம் முழுவதும் அடுத்தாண்டு ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆடுஜீவிதம்
ஆடுஜீவிதம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 7:44 PM IST

சென்னை: உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சர் த்ரில்லராக உருவாகியுள்ள ‘தி கோட் லைஃப் (The Goat Life)’ திரைப்படம் ஏப்ரல் 10, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் தமிழில் ‘ஆடுஜீவிதம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

விஷுவல் ரொமான்ஸ் தயாரிப்பில், தேசிய விருது வென்ற பிளெஸ்ஸி இயக்கியுள்ள ‘தி கோட் லைஃப்’ ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், அமலா பால், கே.ஆர்.கோகுல் மற்றும் பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக்காபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். தரமான தயாரிப்பு, அழகியல் கூறுகள், கதை சொல்லல், மற்றும் நடிகர்களின் நடிப்புத் திறமை, ஆன்மாவைத் தூண்டும் பின்னணி இசை ஆகியவற்றுடன் இப்படம் பிரம்மாண்ட திரையரங்க அனுபவத்தைக் கொடுக்க உள்ளது.

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தொண்ணூறுகளின் முற்பகுதியில் கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த இளைஞன் நஜீப்பின் வாழ்க்கையின் உண்மைக் கதையைத்தான் இந்த நாவல் விளக்குகிறது. உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த இந்தியப் படம் பற்றி இயக்குநர் பிளெஸ்ஸி பேசுகையில், “உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் நிச்சயம் ஏதேனும் ஒரு புள்ளியில் இந்தப் படத்தின் கதையைத் தங்களோடு இணைத்துப் பார்ப்பார்கள்.

அப்படியான கதையை உண்மைத் தன்மை மாறாமல் சினிமாவாக்க வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தில் நான் சந்தித்த மிகப்பெரிய சவால். இந்த நாவல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும், ஒருவருக்கு நம்ப முடியாத ஒன்று நடந்ததை ஒவ்வொரு கணத்திலும் காட்டி பார்வையாளர்களை ஈர்க்க விரும்புகிறேன்.

புனைவு கதைகளை விட உண்மை ஒருபோதும் விசித்திரமாக இருந்ததில்லை. கதை சொல்லும் உண்மைத் தன்மையின் பிரம்மாண்டம் திரையரங்குகளில் பார்வையாளர்கள் படம் பார்க்கும் போது தெரிய வரும். இந்த மாபெரும் படைப்பை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ‘தி கோட் லைஃப்’ திரைப்படம் திரையரங்குகளில் அடுத்தாண்டு ஏப்ரல் 10, 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா - தமிழ் போட்டிப் பிரிவில் 12 படங்கள் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.