நடிகர் பிரபுதேவா சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டு தற்போது படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இவரது கைவசம் 'பஹீரா', 'பொய்க்கால் குதிரை', பெயரிடப்படாத இரண்டு திரைப்படங்கள் உள்ளிட்ட படங்கள் உள்ளன. மேலும், இவர் 'மஞ்சப்பை' திரைப்படத்தை இயக்கிய ராகவன் இயக்கத்தில் 'மை டியர் பூதம்' படத்திலும் நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி வெளியானது. அபிஷேக் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரபுதேவா பூதமாக நடித்து கவனத்தை ஈர்க்கிறார்.
இப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிக்கும் நிலையில், தற்போது இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இம்மாதம் 15ஆம் தேதி ’மை டியர் பூதம்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் பிரபுதேவா ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர்.