ETV Bharat / entertainment

Adipurush: ‘ஆதிபுருஷ்’ ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு! - பிரபாஸ் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகும் படம்

பிரபாஸ் நடிப்பில் உலகம் முழுவதும் சுமார் 70 நாடுகளில் வெளியாகவிருக்கும் ‘ஆதிபுருஷ்’ (Adipurush) திரைப்படத்தின் படம் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Adipurush
ஆதிபுருஷ்
author img

By

Published : May 6, 2023, 3:44 PM IST

சென்னை: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான பிரபாஸ் ‘பாகுபலி’ படத்துக்கு பின் இந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார். தமிழிலும் அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். பிரபாஸ் நடிப்பில் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள். அதைத் தொடர்ந்து, பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது.

தற்போது ‘சாலர்’, ‘ஆதிபுருஷ்’ (Adipurush) உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆதி புருஷ் படம் இந்த ஆண்டில் பார்வையாளர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஓம் ராவத் இயக்கத்தில் தயாரான இந்த பிரம்மாண்டமான படைப்பு இதற்கும் முன் நியூயார்க்கில் நடைபெற்ற ட்ரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேக திரையிடலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படத்தின் புதிய தகவல்களுடன் வெளியிடப்படும் பிரத்யேக போஸ்டர் மற்றும் காணொளிகள், ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்து வருகிறது. இதனை தொடர்ந்து படக்குழு முன்னோட்ட வெளியிட்டிற்கு தயாராகி இருக்கிறது. இப்படத்தின் முன்னோட்டம் இந்தியாவில் மட்டுமல்லாமல் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் உலகளாவிய அளவில் வெளியிடப்படவிருக்கிறது.

இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், மியான்மர், இலங்கை, ஜப்பான் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளில் மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ரஷ்யா, எகிப்து உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் இந்த பிரம்மாண்டமான முன்னோட்டம் வெளியாகிறது.

இதனால் இப்படத்துக்கு உலக அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாரான 'ஆதி புருஷ்' திரைப்படத்தை டி சீரிஸ் பூஷன் குமார் & கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் மற்றும் யு வி கிரியேசன்ஸின் பிரமோத் - வம்சி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ஹிந்தி மற்றும் தெலுங்கில் தாயாராகும் இந்த திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் ஜூன் மாதம் 16 ஆம் தேதியன்று உலகம் முழுதும் 3டி-யில் வெளியாகிறது. இந்த நிலையில் இதன் ட்ரெய்லர் வரும் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: The Kerala Story: தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு.. தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய எஸ்டிபிஐ கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.