ETV Bharat / entertainment

லியோ பாடல் 'peaky blinders' வெப் சீரியஸில் இருந்து காப்பியா? - அனிருத்தை துரத்தும் காப்பி கேட் சர்ச்சை! - லோகேஷ் கனகராஜ்

Anirudh copycat controversy: இசையமைப்பாளர் அனிருத் லியோ படத்தில் ordinary person என்ற பாடலை ஒட்னிக்கா என்ற பல்கேரிய இசையமைப்பாளரின் peaky blinders என்ற ஆங்கில வெப் சீரியஸில் இருந்து காப்பியடித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

சர்ச்சையில் அனிருத்
சர்ச்சையில் அனிருத்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 10:48 PM IST

சென்னை: இசையமைப்பாளர் அனிருத், தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஒய் திஸ் கொலவெறி என்ற‌ பாடல் உலகளவில் ஹிட்டடித்தது. அதனை தொடர்ந்து நிறைய வெற்றிப் பாடல்களை கொடுத்து வந்தவர், முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.

ரஜினி, அஜித், விஜய், கமல் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்கள் என்றாலே அனிருத் தான் இசையமைப்பாளர் என்றானது. ஒருபுறம் வெற்றிப் பாடல்கள் பல கொடுத்தாலும், மறுபுறம் இவர் நிறைய வெளிநாட்டு பாடல்களை காப்பி அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. குறிப்பாக கத்தி படத்தில் வந்த தீம் மியூசிக் காப்பி என்று கூறப்பட்டது. வேதாளம் உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் காப்பி அடிக்கப்பட்டவை என்று ரசிகர்களால் பேசப்பட்டது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் படம் லியோ. இப்படம் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்த நிலையில் தற்போது அனிருத் மூலம் மற்றொரு சர்ச்சையும் எழுந்துள்ளது. அனிருத் இசையில் இந்த படத்தில் இருந்து ஆர்டினரி பெர்சன் (ordinary person) என்ற பாடல் வெளியிடப்பட்டது.

இந்த பாடல் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடல் பல்கேரிய நாட்டின் ஒட்னிக்கா என்ற இசைக்கலைஞர் இசையில் உருவான வேர் ஆர் யூ என்ற பாடலின் காப்பி என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இது குறித்து அவரை டேக் செய்து ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒட்னிக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் "நண்பர்களே லியோ படத்தை பற்றி ஏராளமான குறுஞ்செய்திகள் வந்துள்ளன. எல்லாவற்றையும் நான் பார்க்கிறேன், ஆனால் அனைத்திற்கும் என்னால் பதில் அளிக்க முடியாது. மெயில், இன்ஸ்டாகிராம், யூடியூப் என அனைத்து பக்கங்களிலும் கருத்துக்கள் நிரம்பி வழிகிறது. என்னவென்று தெளிவாக தெரியவில்லை.

நாங்கள் இதனை பார்த்து விட்டு இதுகுறித்து கூறுகிறேன். ஆனால் நான் இதுவரை யாரையும் குற்றம் சொல்லவில்லை” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வேர்‌ ஆர்‌ யூ பாடலில் இசையமைப்பாளர் ஆர்டம் மிகேன்கினுக்கும் பங்குண்டு என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஒட்னிக்கா peaky blinders என்ற பிரபல ஆங்கில வெப் சீரியஸின் இசையமைப்பாளர் ஆவார். அந்த தொடரில் வரும் I'm not outsider என்ற பாடலின் சாயல் ordinary person பாடலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத்தின் இந்த செயலால் சமூக வலைதளங்களில் அவரது பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கியூட் லுக்கில் விஜய்.. மாஸாக இணைந்த நட்சத்திரங்கள் - தளபதி 68 பட பூஜை வீடியோ வெளியானது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.