ஐதராபாத்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. படம் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் தமன்னாவின் நடிப்பு அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. தமன்னாவின் நடனத்தில் வெளியான முதல் பாடலான ‘காவாலா’ இப்போது வரை இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
காவாலா பாடல் உலக மக்களிடையே பெரும் அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் அந்த பாடல் தான் தனக்கு நீண்ட நாளுக்கு பின்னர் புகழ் பெற்று தந்துள்ளது எனக் கூறுகிறார். நடிகை தமன்னாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நிறைய புரளிகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கும். அதற்கெல்லாம் பதில் தராமல் அதனைவிட்டு விலகி வந்தார். மேலும் தமன்னாவின் காதல் மற்றும் திருமணம் குறித்து எழுந்த கேள்விகளை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக பல புரளிகள் சினிமா மற்றும் ரசிகர்கள் வட்டாரங்களிடையே சுற்றிவர ஆரம்பித்தன. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தமன்னா, நடிகர் விஜய் வர்மா உடனான காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் தமன்னா தனது சமூகவலைதளங்கள் மற்றும் பேட்டிகளில் விஜய் வர்மாவின் மேல் காதல் பற்றிய விவரங்களை வெளிபடுத்த ஆரம்பித்துள்ளார்.
லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தின் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டது எனவும் தன்னுடைய உலகத்தை புரிந்து கொண்ட ஒருவர் கிடைத்து உள்ளதாகவும், அவர் தான் தன்னுடைய மகிழ்ச்சியான இடம் என நடிகை தமன்னா கூறினார். அதைதொடர்ந்து நடிகை விஜய் வர்மாவை பற்றிய தகவல்களை ரசிகர்கள் சேகரிக்க ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க:உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் ஜெயிலர் திரைப்படம் பார்க்கும் ரஜினிகாந்த் !
ஹிந்தி நடிகர் விஜய் வர்மா தனது பன்முக நடிப்பு திறமையால் அறியப்படுபவர். இவர் சினிமா துறையில் மட்டுமல்லாது, அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனத்தை ஈர்க்கப்படுபவர். டார்லிங்ஸ், தஹாத், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரம் முதல் கதாநாயனாக நடித்து அவரது திறமையை வெளிபடுத்தியுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “ தற்பொழுது திறையுலகில் பெரிதும் பேசப்படும் ஜோடிகளாக இருக்கிறோம் என்ற செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். இது மிகவும் இனிமையாக இருக்கிறது. எனக்கு இது எல்லாம் பழக்கம் இல்லை, முதலில் நடந்தபோது வித்தியாசமாக இருந்தது. இப்போது நாங்கள் ஒன்றாக வெளியே சென்றால் அதிக கவனத்தை ஈர்க்கிறோம். இது எனக்கு வசதியாக இல்லை, ஆனால் நான் அதைப் பழக்கப்படுத்த முயற்சிக்கிறேன்" என்றார்
நடிகர் விஜய் வர்மா தற்போது நடிகை கரீனா கபூர் கானுடன் நடித்துள்ள 'தி டெவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்' மற்றும் சாரா அலி கானுடன் 'மர்டர் முபாரக்' போன்ற படங்கள் எதிர்பார்ப்புக்குரியவையாக உள்ளன.
இதையும் படிங்க: ரஜினி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் - இந்திய அளவில் ஸ்பாட்டிஃபை செயலியில் முதலிடம் பிடித்த ரஜினி பாடல்!