தீபாவளி பண்டிகை என்றால் எல்லோரையும் விட தமிழ் சினிமா ரசிகர்களுக்கே கொண்டாட்டம் என்று சொல்லலாம். அந்த நாளில் ஏராளமான புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும். மேலும், புதிய படங்களின் அடுத்தடுத்த அப்டேட்ஸ்களும் வெளியாகும். அதேபோன்று இந்தாண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’பிரின்ஸ்’, கார்த்தி நடிப்பில் ’சர்தார்’ படங்கள் வெளியாகின்றன. இருவரது ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
அதுமட்டுமின்றி, அஜித் நடித்துள்ள ’துணிவு’ படத்தின் மூன்றாவது லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாக உள்ளன. மேலும், தனுஷ் நடித்துள்ள ’வாத்தி’ படத்தின் முதல் பாடல், விஜயின் ’வாரிசு’ படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளன. சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படத்தின் டீஸர் அல்லது பாடல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலகினருக்கும் மிகுந்த ஆரவாரத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: வசூலில் விக்ரம் படத்தை முந்திய பொன்னியின் செல்வன்!