கரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஒரு சில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாக தொடங்கின. அதே சமயம் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர்.
இந்த சூழலில் சூர்யா, ஜோதிகா ஆகியோரின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ”சூரரைப் போற்று” திரைப்படம் முதல் முறையாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் அதையும் தாண்டி இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள 2020ஆம் ஆண்டுக்கான 68ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில்,
சிறந்த திரைப்படம் - சூரரைப் போற்று
சிறந்த நடிகர்- சூர்யா
சிறந்த நடிகை- அபர்ணா பாலமுரளி
சிறந்த பின்னனி இசை- ஜி. வி. பிரகாஷ் குமார்
சிறந்த திரைக்கதை- சுதா கொங்கரா
வருதை குவித்துள்ளது.
இதையும் படிங்க: ஒரே அறையில் வைத்து கூர்மையான பொருட்களை மறைத்து வைத்தால்... - நாக சைதன்யா குறித்து சமந்தா!