ETV Bharat / entertainment

’இதை தசாவதாரம்-2 என்றும் சொல்லலாம்..!’ - மாயோன் திரைப்படத் தயாரிப்பாளர் - சிபி சத்யராஜ்

சிபி சத்யராஜ் நடித்துள்ள ’மாயோன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

’இதை தசாவதரம் -2 என்றும் சொல்லலாம்..!’ - மாயோன் திரைப்பட தயாரிப்பாளர்

author img

By

Published : Jun 5, 2022, 5:17 PM IST

Updated : Jun 5, 2022, 6:58 PM IST

ஃபேன்டசி அட்வென்சர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ள ’மாயோன்’ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். கிஷோர் இயக்கியுள்ளார். ’மாயோன்’ திரைப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பார்வையற்றவர்களுக்கு ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் ட்ரெய்லர் போட்டுக்காட்டப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் அருண்மொழி , “ ரதயாத்திரை என்பது எங்கிருந்து எங்கு வந்தால் என்ன. என்னைப் பொறுத்தவரையில் அன்பை பரப்ப வேண்டும். இது தசாவதாரம்-2ஆம் பாகம் என்றுகூட சொல்லலாம். ’சைக்கோ’ படத்தை பார்வையற்றவர்களுக்கு போட்டுக்காட்டினோம். அதுவே இப்படத்திற்கும் செய்தோம். மகிழ்ச்சியாக உள்ளது” எனப் பேசினார்.

இதில் கலந்துகொண்ட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், “இது சாமி படம் இல்லை. பல்வேறு விஷயங்கள் இப்படத்தில் உள்ளன” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய இப்படத்தின் கதாநாயகன் சிபி சத்யராஜ், “இப்படத்தில் அறிவியல் மற்றும் தொல்லியல்துறை பற்றி கூறப்பட்டுள்ளது. கலியுகம் மாதிரி இது பான் இந்தியா யுகம். அறிவியல் கலந்த த்ரில்லர் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். இப்படத்திற்காக ஸ்பெஷல் ரதயாத்திரை தமிழ்நாடு முழுவதும் சுற்றிவரவுள்ளது” எனப் பேசினார்.

இதையும் படிங்க: முதலமைச்சருக்கு நேரில் பத்திரிகை வைத்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்

Last Updated : Jun 5, 2022, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.