ETV Bharat / entertainment

Ponniyin Selvan 2: ஆரவாரத்துடன் வெளியானது பொன்னியின் செல்வன்-2; ரசிகர்கள் உற்சாகம்! - Aishwarya Rai

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நட்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

PS 2: வெளியானது பொன்னியின் செல்வன் பார்ட் 2 - ரசிகர்கள் கொண்டாட்டம்!

author img

By

Published : Apr 28, 2023, 10:12 AM IST

சென்னை: இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராக இருப்பவர் மணிரத்னம். தனது படங்களின் மூலம் தமிழ் திரைப்படத்தை வேறு தளத்திற்குக் கொண்டு சென்றவர். இவரது படங்களில் நடிக்க நடிகர்கள் போட்டிப் போட்டு வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம், அமரர் கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக எடுத்துள்ளார்.

எம்ஜிஆர் தொடங்கி கமல்ஹாசன் வரை பலரும் முயற்சித்தும் முடியாமல் போன இந்த படத்தை மணிரத்னம் எடுத்துச் சாதித்து உள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரித்திருந்தது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் கிட்டத்தட்ட ரூ.500 கோடி வரை முதல் பாகம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார்.

முதல் பாகம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் மிகவும் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதல் பாகத்தை விட இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் இடையேயான காட்சிகள் மிகவும் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று கார்த்தி, த்ரிஷா இடையிலான காதல் காட்சிகளும் நன்றாக உள்ளதாக கூறியுள்ளனர். முதல் பாகம் மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் பாராட்டு பெற்று வருவது படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

பொன்னியின் செல்வன் நாவலை பொறுத்தவரை பல்வேறு திருப்பங்கள் நிறைந்து காணப்படும். அதனை மணிரத்னம் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். தேவையான கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மிக நேர்த்தியாக திரைக்கதை அமைத்து ரசிகர்களுக்கு மிகப் பெரிய காட்சி வடிவ விருந்து வைத்துள்ளார்.

முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் சிறப்பாக இருப்பதாக வருகின்ற தகவல்களால் இந்த கோடை விடுமுறையில் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக பொன்னியின் செல்வன் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை எனலாம். அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஐமேக்ஸ், 4டி, என பல்வேறு தொழில்நுட்பங்களிலும் வெளியிடப்பட்டுள்ளதால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியமூட்டும் திரை அனுபவத்தை கொடுக்கும் என்கின்றனர்.

இதையும் படிங்க: Mark Antony: "போன்ல டைம் ட்ராவலா..?" - வெளியானது 'மார்க் ஆண்டனி' டீசர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.