ETV Bharat / entertainment

36 ஆண்டுகளுக்கு பிறகு கமல் - மணிரத்னம் கிளாசிக் கூட்டணி.. வைரலாகும் 'KH234' வீடியோ! - today latest news

Kamal Haasan 234th film: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் தொடக்க விழா வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

Kamal Haasan 234th film
36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் 'நாயகன்' கூட்டணி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 2:09 PM IST

Updated : Oct 27, 2023, 7:08 PM IST

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து, கடந்த 1987ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் 'நாயகன்'. மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம், இன்று வரை மிகச் சிறந்த படமாக உள்ளது. மேலும் இந்திய சினிமா சார்பில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இளையராஜாவின் இசையமைப்பில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு, கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணையவில்லை.

இந்த நிலையில், கமல் - மணிரத்னம் கூட்டணி தற்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனின் 234வது படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் தொடக்க விழா வீடியோவை தயாரிப்பு தரப்பு தற்போது வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார் மற்றும் அன்பறிவு சண்டைக் காட்சிகளை இயக்க உள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்கள் வெளியாகி, நல்ல வரவேற்பு பெற்றது.‌ அதேபோல் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான 'விக்ரம்' திரைப்படம், வசூல் வேட்டை நடத்தியது.‌ கமல்ஹாசன் தற்போது பிரபாஸ் நடிக்கும் 'கல்கி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்திலும் நடித்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்தில் நடிக்கிறார். இதன் அடுத்தகட்டமாக மணிரத்னம் இயக்கும் தனது 234வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தற்போது கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் எச்‌.வினோத் இயக்கும் கமல்ஹாசனின் 233வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மணிரத்னம் படத்தில் அவர் இணையவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காதலுக்கு தலையசைத்த அமலா பால்.. வைரலாகும் 'லிப் லாக்' வீடியோ!

Last Updated : Oct 27, 2023, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.