மும்பை: நடிகர் விஜய்தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பான் இந்தியப் படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் 'லிகர்'. இந்தப் படத்தில் குத்துச்சண்டை விளையாட்டின் ஜாம்பவானான 'மைக் டைசன்' நடித்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்நிலையில், இன்று(ஜூன் 30) பிறந்த நாள் காணும் மைக் டைசனுக்கு ‘லிகர்’ படக்குழுவினர் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து அப்படத்தின் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு செப்.9 அன்று வெளியாகவிருந்த நிலையில், கரோனா பாதிப்பின் காரணமாக வெளியீட்டு தேதி தள்ளிப் போனதால் வருகிற ஆக.25 அன்று வெளியாகவுள்ளது.
‘பூரி கன்னெக்ட்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.